அம்பானி சார் இதைகூட நீங்க விட்டுவைக்கலயா.. வெறும் 10 ரூபா.. புதுசா ஒரு பிராண்ட்-ஐ அறிமுகம் செய்த ரிலையன்ஸ்!

இந்தியாவின் மிகப்பெரிய FMCG பிராண்டுகளில் ஒன்றாக திகழும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில் புதிதாக ஐஸ்கிரீம் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஐஸ்கிரீம் நுகர்வு அதிகரித்து வருகிறது, குறிப்பாக பெரு நகரங்களில் உயர்தரமான, புதிய சுவையில் அறிமுகம் செய்யப்படும் ஐஸ்கிரீம்-களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் முக்கியமாக இளம் தலைமுறையினரை கவரும் வகையில் ஐஸ்கிரீம் பேகேஜ் மாறி வருவது முக்கிய அட்டிராக்ஷனாக மாறி வருகிறது.

 அம்பானி சார் இதைகூட நீங்க விட்டுவைக்கலயா.. வெறும் 10 ரூபா.. புதுசா ஒரு பிராண்ட்-ஐ அறிமுகம் செய்த ரிலையன்ஸ்!

இப்படி வேகமாக வளர்ந்து வரும் சந்தையை கவனித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பாம்பே க்ரீமரி என்ற புதிய ஐஸ்கிரீம் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்ட் மக்களுக்கு உயர்தரமான டைய்ரி பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Also Read

இதேவேளையில் இத்துறையில் பெரிய நிறுவனங்களை தாண்டி மாநிலம், நகரங்கள் அடிப்படையிலான பிராண்டுகளும் அதிகமாக இருக்கும் காரணத்தால் ரிலையன்ஸ்-க்கு போட்டி அதிகமாகவே இருக்கும்.

பொதுவாக ரிலையன்ஸ் புதிய வர்த்தகத்தில் இறங்க திட்டமிட்டால் அத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அல்லது பிரபலமான நிறுவனங்களை கைப்பற்றி அதன் மூலம் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் மேம்படுத்தும்.

இப்புதிய பிராண்ட் குறித்து Reliance Consumer Products நிறுவனத்தின் டைரெக்டர் டி.கிருஷ்ணகுமார் கூறுகையில் Bombay Creamery பிராண்டின் கீழ் கோன், கப், டப், பார், குச்சி ஐஸ் வரையில் அனைத்து விதமான பேகேஜிலும் அறிமுகம் செய்யப்படும் மேலும் இதன் விலை 10 ரூபாயில் இருந்து துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக Bombay Creamery பொருட்கள் மேற்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் பின் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்படும்.

 அம்பானி சார் இதைகூட நீங்க விட்டுவைக்கலயா.. வெறும் 10 ரூபா.. புதுசா ஒரு பிராண்ட்-ஐ அறிமுகம் செய்த ரிலையன்ஸ்!

Bombay Creamery மூலம் ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வமாக இந்திய ஐஸ்கிரீம் சந்தைக்குள் நுழைந்துள்ளது, இத்துறையில் வர்த்தகத்தை துவங்குவதற்காக 2023ல் இருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.

இதற்கு முன்பு அனந்த் அம்பானி தலைமையில் இயங்கும் வனந்தரா வலவிலங்கு பூங்கா நிறுவனத்தின் கீழ் Vantara Creamery என்ற பிராண்ட் மே மாதம் துவங்கப்பட்டது. ஆனால் இது ஆடம்பர பிரிவை சார்ந்த பொருட்களை டார்கெட் செய்து விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி இணைந்து ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக நெட்வொர்க்-ஐ வலுப்படுத்தும் இதேவேளையில் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் மூலம் தனது சொந்த பிராண்ட் பொருட்களை அதிகளவில் சந்தைக்கு கொண்டு வந்து வர்த்தகத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+