இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் இந்திய குளிர்பான சந்தையில் பெரும் வர்த்தக சந்தையை கைப்பற்றிய நிலையில், இதில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் லிமிடெட் ஆரோக்கிய குளிர்பான துறையில் நுழையும் வகையில், நேட்சர்எட்ஜ் பெவரேஜஸ்
(Naturedge Beverages) நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் குளிர்பான வணிகத்தில் இத்துறை விரிவாக்கம் மூலம் முழுமையான நிறுவனமாக உயர்ந்துள்ளது.

நேட்சர்எட்ஜ் பெவரேஜ்ஸ் நிறுவனம், 2018இல் பைட்யானாத் குழுமத்தைச் சேர்ந்த சித்தேஷ் ஷர்மா என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஷூன்யா என்ற பிரபல பிராண்டின் கீழ் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. ஷூன்யம் என்றால் பூஜ்ஜியம் என்பது பொருள், அதாவது தனது பானத்தில் பூஜ்ஜிய கலோரி மற்றும் பூஜ்ஜிய சர்க்கரை கொண்ட ஆயுர்வேத குளிர்பானம் என்பதை குறிக்கிறது.
இந்த குளிர்பானம் அஷ்வகந்தா, பிராமி, குஷ், கோகும் மற்றும் கிரீன் டீ போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. Naturedge Beverages நிறுவனத்தில் நுழைந்துள்ளது மூலம் ஆரோக்கியம் சார்ந்த, ஹெர்பல் மற்றும் இயற்கை சார்ந்த குளிர்பான துறையில் முதல் முறையாக ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் நுழைகிறது.
இந்த பங்கு கைப்பற்றல் மூலம் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ்-ன் விநியோக வலிமையை கொண்டு ஷூன்யா பிராண்டை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ். இதன் மூலம் தேசிய அளவில் ஆரோக்கியத்தை முக்கியமாக கருதும், விரும்பும் மக்களிடம் இந்த ஆரோக்கிய குளிர்பானங்களை கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் காம்பா, ராஸ்கிக் மற்றும் காம்பா எனர்ஜி போன்ற முக்கியமான பிராண்டுகளை கைப்பற்றி தான் குளிர்பான வர்த்தகத்திற்குள் நுழைந்தது. இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல Naturedge Beverages நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் NSE-யில் 0.66 சதவீதம் உயர்ந்து ரூ.1,382.90இல் முடிவடைந்தன.


Click it and Unblock the Notifications