சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..!

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்காகவும், எரிபொருளுக்காகவும் மக்கள் திண்டாடி வரும் வேளையில், யாருக்குமே கிடைக்காத வெனிசூலா எண்ணெய்யை வைத்துக்கொண்டு சம்பவம் செய்து வருகிறது.

வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை பெரிய அளவில் குறைந்துள்ளது, இதேவேளையில் உலக நாடுகளுக்குச் செல்ல வேண்டிய ரஷ்யாவின் எரிபொருளுக்கு வேட்டு வைக்கும் வகையில் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் சுத்திகரிப்பு ஆலையைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோ ஐபிஓ-வுக்கு புதிய வழியில் கல்லா கட்டும் ரிலையன்ஸ்..!

இதனால் எரிபொருள் சப்ளை என்பது உலகளவில் பெரிய அளவில் முடங்கியுள்ளது. இந்த நெருக்கடியை புதிய வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

வெனிசூலாவில் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கி வரும் கச்சா எண்ணெய்யைக் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டீசலாகவும், பிற எரிபொருளாகவும் மாற்றி தற்போது பெரியளவிலான சர்வதேச வர்த்தக சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

Also Read

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் மார்கோ ரூபியோ சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த போது டெல்லிக்கு செல்லாமல் நேரடியாக குஜராத் ஜாம்நகருக்கு சென்று முகேஷ் அம்பானியை சந்தித்து அமெரிக்காவுக்கான டீசல் சப்ளையை உறுதி செய்தார். ஆனால் முகேஷ் அம்பானி தற்போது பெட்ரோல் மற்றும் எரிபொருளுக்காக புதிய சந்தையை கைப்பற்றியுள்ளார்.

எப்போதும் இல்லாமல் இந்த மத்திய கிழக்கு போரைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் மற்றும் மற்ற ஐரோப்பியச் சந்தைகளில் சுமார் 50 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

உதாரணமாக ஆஸ்திரேலியா, கென்யா, டான்சானியா ஆகிய சந்தைகளை ப்ரீமியம் கேசோலின்-க்கும், மத்திய தரைக்கடல் மற்றும் மற்ற ஐரோப்பியச் சந்தைகளில் விமான எரிபொருளுக்கான சந்தையாக மாற்றியுள்ளது.

Recommended For You

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ள வேளையில் இதை வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளார் முகேஷ் அம்பானி.

செப்டம்பர் காலாண்டு முடிவில் ஆயில் டூ கெமிக்கல் வர்த்தக பிரிவில் மட்டுமே ரிலையன்ஸ் சுமார் 231,601 கோடி ரூபாய் என்ற 44 சதவீதம் அதிக வருமானத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் EBITDA அளவு 25,203 கோடி ரூபாய் அளவீட்டை பதிவு செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 68 சதவீதம் அதிகமாகும். மத்திய கிழக்கு போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வருடத்தில் 41 சதவீதமும், போக்குவரத்து கட்டணம் 50 -78 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+