முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அனுமதி.. ஆனால் இனி ரொம்ப கஷ்டம்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் வேளையில் நிதி சேவைகள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ்-ன் இப்புதிய கடன் சேவைகள் அளிக்கும் வர்த்தக பிரிவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து தனியாக பிரிக்க முடிவு செய்து தனியாக இயக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் மே 2 ஆம் தேதி முக்கிய கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி நிர்வாகத்திற்கு நிதி சேவை பிரிவை தனியாக பிரிக்க பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அனுமதி.. ஆனால் இனி ரொம்ப கஷ்டம்..!

மே 2 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தனியாக பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் தற்போது Reliance Strategic Investments ஆக இயங்கி வரும் நிதிசேவை பிரிவு தனியாக பிரித்த பின்பு இதன் பெயரை Jio Financial Services Limited என மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் RIL பங்கு எண்ணிக்கைக்கு இணையாக Jio Financial Services Limited பங்குகளை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒருவர் 10 ரிலையன்ஸ் பங்குகளை வைத்திருந்தால் அவருக்கு தானாக 10 io Financial Services பங்குகள் கிரெடிட் செய்யப்படும்.

Jio Financial Services Limited நிறுவவனம் தனது வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களுக்கு கடன் அளிக்கும் புதிய சேவையை வழங்க உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் தனது பொருட்களை வாங்குவோம் கன்ஸ்யூமர் மற்றும் மெர்செனட் ஆகியோருக்கு கடன் கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.

Jio Financial Services நிறுவனம் தற்போது NBFC நிறுவனமாக இருக்க போகிறது, ஆனால் எதிர்காலத்தில் வங்கி உரிமம் பெறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்திய NBFC சந்தையின் மதிப்பு 10.84 லட்சம் கோடி ரூபாய், இச்சந்தையில் பல நிறுவனங்கள் இருக்கும் வேளையிலும், பெரிய வர்த்தக சம்ராஜ்ஜியங்களான டாடா, ஆதித்யா பிர்லா, பஜாஜ் போன்றவை இருக்கும் வேலையில் ரிலையன்ஸ் களத்தில் இறங்கியுள்ளது.

NBFC பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களை பெற்று மிகப்பெரிய ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் உடன் தற்போது Jio Financial Services நிறுவனம் போட்டிப்போட உள்ளது. சண்டைன்னு வந்த சட்டை கிழியும் என்பது போல் இரு நிறுவனங்கள் மத்தியிலான போட்டி தான் இந்திய NBFC-யின் எதிர்காலம்.

இதேவேளையில் வங்கிகளுக்கு இணையாக NBFC நிறுவனங்களுக்கு விதிமுறையும், கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் செய்து வருகிறது ரிசர்வ் வங்கி. இதனால் ஒருப்பக்கம் போட்டி, மறுப்பக்கம் கடுமையான ஆர்பிஐ விதிமுறைகள் மத்தியில் Jio Financial Services நிறுவனம் வெற்றிப்பெறுவது என்பது எளிதான காரியமில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+