சென்னை: இந்திய போட்டி ஆணையம் (CCI) புதன்கிழமை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி இந்தியா மத்தியிலான மீடியா சொத்துக்களை இணைத்து 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கூட்டணி ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீமிங் மற்றும் பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பில் மோனோபோலியாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இக்கூட்டணி தானாக முன்வந்து இந்த இணைப்பில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் இந்தியப் போட்டி ஆணையத்தின் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக ஊடக தளமான X இல் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது CCI.

இந்தியாவின் மீடியா துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த இணைப்பு, ரிலையன்ஸ் வியாகாம்18 மற்றும் டிஸ்னி ஸ்டார் இண்டியாவின் வணிகங்களை இணைக்கும். இதன் மூலம் இந்தியாவின் மீடியா துறையில் ஒரு பெரிய நிறுவனம் உருவாகும்.
இந்த இணைப்பின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிஸ்னியின் இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி மற்றும் OTT தளங்களான ஹாட்ஸ்டார், டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஸ்டார் மற்றும் டிஸ்னி சேனல்களின் உரிமைகளைப் பெறும்.
இந்த இணைப்பின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட், டிஜிட்டல் 18 மீடியா லிமிடெட், ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டார் டெலிவிஷன் புரொடக்ஷன்ஸ் லிமிடெட் சொத்துக்கள் இணைக்கப்பட்டு 120 டிவி சேனல்கள், 2 OTT தளங்கள் என மாபெரும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுக்க உள்ளது.
ஆனால் தற்போது ரிலையன்ஸ் - டிஸ்னி கூட்டணி தானாக முன்வந்து இந்த இணைப்பில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது மூலம், என்ன திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது முழுமையாகத் தெரியவில்லை.
இந்த இணைப்பு இந்தியாவின் மீடியா துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மீடியா துறை வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.

இந்த இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் 56% பங்கும், டிஸ்னி 37% பங்கும் வைத்திருக்கும். ஜேம்ஸ் முர்டாக் மற்றும் உதய் சங்கர் ஆகியோர் துவக்கிய போதி டிரீ சிஸ்டம்ஸ் நிறுவனம், புதிய நிறுவனத்தில் 7% பங்கை வைத்திருக்கும்.
இந்த இணைப்பு மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் உருவாவது மட்டும் அல்லாமல் சோனி, ஜீ என்டர்டெயின்மென்ட், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன் மொத்தமாக போட்டிப்போடும் நிலை உருவாகும்.


Click it and Unblock the Notifications