ஆனந்த் அம்பானி திருமணத்தை ஒட்டி ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மும்பை ஜியோ வேர்ல்ட் மையத்தில் நேற்றைய தினம் திருமணம் முடிந்தது. மூன்று நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தங்களின் செல்ல மகனின் திருமணத்தை ஒட்டி அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பரிசு பெட்டகத்தை வழங்கியுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு பரிசானது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த பரிசு குறித்து தன்யராஜ் என்ற ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். சிவப்பு நிற பரிசு பெட்டியில் தங்க நிற எழுத்துக்களில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் என பொறிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் வாழ்த்துகள் என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பரிசு பெட்டியில் ஒரு வெள்ளி நாணயம், இனிப்புகள் மற்றும் ஹல்திராம்ஸின் கார வகைகள் ஆகியவை உள்ளன.
இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரக்கூடிய இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை உலகமே வியந்து பார்க்கும் வகையில் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தில் அம்பானி குடும்பத்தினர் குஜராத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளை நடத்தினர். மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்வதேச பிரபலங்களும் ,தொழிலதிபர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஜூன் மாதம் 1ஆம் தேதி ஐரோப்பாவில் சொகுசு கப்பல் ஒன்றில் மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதனை அடுத்து பாரம்பரிய முறைப்படி மும்பையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், சர்வதேச பிரபலங்கள் மற்றும் பல்வேறு தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்காகவே அம்பானி குடும்பம் பிரத்யேகமாக விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக மூன்று ஃபால்கன் ஜெட்களையும் 100 விமானங்களையும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications