அனில் அம்பானி உடன் டீல் போடும் சிஇஓ.. ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் விற்பனை..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய திரையுலகில் பல முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை அனில் அம்பானியிடம் இருந்து மொத்தமாக வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷிபாசிஷ் சர்க்கார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானி அடுத்தடுத்து வர்த்தகத்தை இழந்த காரணத்தால் தற்போது கிட்டதட்ட திவாலாகியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் சீன வங்கிகள் அனில் அம்பானி மீது தொடுத்த வழக்கில் தன் பெயரில் எவ்விதமான சொத்துக்களும் இல்லை என்றும், தனது மொத்த சொத்து மதிப்பு ஜீரோ என்றும் கூறினார்.

சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா..! சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா..!

இந்நிலையில் அனில் அம்பானி-யின் ரிலையன்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை மொத்தமாக வாங்க ஷிபாசிஷ் சர்க்கார் முயற்சி செய்து வருகிறார்.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பாலிவுட் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் தமிழ் மொழியிலும் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. சினிமாவுக்கு மிகப்பெரிய வர்த்தகச் சந்தை இருக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும் நிலையில் அனில் அம்பானி எப்படி விடுவார்.

Y Not Studios

Y Not Studios

தமிழ் திரைதுறையில் இறங்குவதற்காக ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், சினிமா தயாரிப்பாளர்களான சஷிகாந்த், சஞ்சய் வத்வா ஆகியோருடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் Y Not Studios. இந்த நிறுவனத்தின் கீழ் மண்டேலா, கேம் ஓவர், ஏலே, ஜகமே தந்திரம் போன்ற பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்
 

இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்

இது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உடன் இணைந்து கூட்டணி நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளது.

ஷிபாசிஷ் சர்க்கார்

ஷிபாசிஷ் சர்க்கார்

இந்த மாபெரும் நிறுவனத்தைத் தான் தற்போது ஷிபாசிஷ் சர்க்கார் தனது சிறப்பு நிறுவன கைப்பற்றல் நிறுவனமான International Media Acquisition Corp (IMAC) மூலம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தை மொத்தமாகக் கைப்பற்ற அனில் அம்பானி உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

1000 கோடி ரூபாய்

1000 கோடி ரூபாய்

இந்தப் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 800 - 1000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இது பேச்சுவார்த்தை உறுதி அடையும் பட்சத்தில் மார்ச் 2022க்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

IMAC நாஸ்டாக் பட்டியல்

IMAC நாஸ்டாக் பட்டியல்

ஷிபாசிஷ் சர்க்கார் தலைமை வகிக்கும் International Media Acquisition Corp (IMAC) நிறுவனம் ஏப்ரல் 9ஆம் தேதி தான் அமெரிக்க நாஸ்டாக் சந்தையில் ஐபிஓ வெளியிட்டு 230 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்டியது. மேலும் ஷிபாசிஷ் சர்க்கார் 2007 முதல் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Entertainment may sell to CEO Shibasish Sarkar Anil Ambani's Big decision

Reliance Entertainment may sell to CEO Shibasish Sarkar Anil Ambani's Big decision
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X