இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பான துறைமுகம், மின்சாரம், சாலை, உற்பத்தி போன்ற துறைகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் அதானி ஆரம்பம் முதல் இத்துறைகளில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி பெரும் தொகையை முதலீடு செய்து இதில் பெரும் வெற்றிக்கண்டுள்ளார். தற்போது இதே பார்மூலாவை அம்பானி குழுமமும் பாலோ செய்ய திட்டமிட்டு வருகிறது.
சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த நிலத்தடி நிலக்கரி எரிவூட்டல் பகுதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு மாவட்டத்தில் அமைப்பதற்காக சுமார் 2.73 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து தற்போது அடுத்தக்கட்டமாக உலோக தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இந்திய உற்பத்தி துறையில் அதிகம் பயன்படுத்தும் உலோகமான அலுமினியத்தை தயாரிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய், டெலிகாம், ரீடைல் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது அடிப்படை உற்பத்தி மற்றும் சேவை துறையில் இறங்குவதற்கு ரிலையன்ஸ் முயற்சி செய்து வருகிறது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் ஒடிசாவில் கர்லாபாத் பாக்சைட் பகுதிக்கான ஏல விண்ணப்பத்தை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3100 ஹெக்டர் அளவிலான இடத்தில் 200 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பார்சைட் இப்பகுதியில் உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் தற்போது அம்பானி, அதானி மட்டும் அல்லாமல் அனில் அகர்வாலின் வேதாந்தா அலுமினியம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பால்கோ நிறுவனமும் பேட்டிப்போடுகிறது.
எதற்காக ரிலையன்ஸ் அலுமினியத்தில் இறங்குகிறது..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆந்திராவி் துவங்க உள்ள நிலக்கரி எரிவூட்டல் மூலம் நிலக்கரியை சிந்தடிக் கேஸ் ஆக மாற்ற முடியும். இதை மின்சாரம் உற்பத்தி செய்யவோ அல்லது தொழிற்துறைக்கான எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். இதை அடிப்படையாக கொண்டு அதிக எரிபொருள் தேவைப்படும் அலுமினியம் உற்பத்தியில் இறங்கலாம் என முகேஷ் அம்பானி திட்டமிட்டு வருகிறார்.
இதன் மூலம் ஆந்திராவின் நிலக்கரி எரிவூட்டல் திட்டமும், ஒடிசாவின் அலுமினியம் திட்டமும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டது என்பது தெரிகிறது.
இதேவேளையில் அதானி குழுமம் தனது உலோக உற்பத்தி துறையை வேகமாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் உலோகத்திற்கான தேவை ஒவ்வொரு துறையிலும் இருக்கும் காரணத்தால் பெரும் தலைகள் அனைத்தும் தற்போது உலோக தயாரிப்பில் பணத்தை கொடுகிறது.


Click it and Unblock the Notifications