ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை ஐபிஓ மூலம் பட்டியலிடுவதற்கு முன்பு முகேஷ் அம்பானி செய்த முக்கியமான விஷயம், இப்பிரிவின் கீழ் இருக்கும் பிராண்டுகளை தனியாக நியூ RPCL நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது தான். முன்பு RPCL, ரிலையன்ஸ் ரீடைல் கீழ் ஒரு தனி நிறுவனமாக இருந்தது, தற்போது இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் தனி கிளையாக உள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நுகர்வோர் பொருட்கள் பிரிவு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு அடுத்தடுத்து மாநில அளவிலான பிராண்டுகளையும், பழம்பெரும் பிராண்டுகளையும் குறிவைத்து கைப்பற்றி வரும் பணிகளை நீண்ட காலமாக செய்து வருகிறது.

இதன் வரிசையில் தற்போது தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட ரூ.668 கோடி வருவாய் ஈட்டும் உதயம் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தில் பெரும்பகுதி பங்குகளை வாங்க உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
உதயம் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனம் உதயம் என்ப பிராண்டின் கீழ் பருப்பு வகைகள், ஸ்னாக்ஸ், ரெடி டு குக் பிரேக்ஃபாஸ்ட் மிக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உதயம் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி தனது வர்த்தகம், நுகர்வோர் மற்றும் தனது சொத்த ரீடைல் பிராண்டான இண்டிபென்டென்ஸ் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, இதேபோல் ரிலையன்ஸ் தரப்பிலும், உதயம் அக்ரோ தரப்பிலும் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிபைப வெளியிட்டு உள்ளது.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதற்கு முன்பு பல பிராண்டுகளை கைப்பற்றுவதற்காக பேச்சுவார்த்தை துவங்கி பின்வாங்கியுள்ளது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், உதயம் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குளை வாங்கினாலும், இதன் நிறுவனர்களான எஸ்.சுதாகர் மற்றும் எஸ்.தினகர் ஆகியோர் சிறு பங்குகளை தொடர்ந்து வைத்திருப்பார்கள் என்று தெரிகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட உதயம் அக்ரோ ஃபுட்ஸ், டாடா கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ், iD ஃப்ரெஷ் ஃபுட், MTR போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகிறது. ரிலையன்ஸ் இதை வாங்கினால் நிறுவனத்தின் விநியோகம், சந்தை பங்கு பெரிதும் உயரும்.
இதற்கு முன்பு ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனத்தை 2020ஆம் ஆண்டு வாங்கி அதன் மொத்த வர்த்தகத்தை தனது ஸ்மார்ட் பஜார் உடன் இணைத்தது. பல இடத்தில் Shri Kannan Smart என்ற பிராண்டிலும் விற்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது உதயம் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் சமீபத்தில் தனது FMCG வியாபாரத்தை நியூ RCPL என்ற புதிய நேரடி துணை நிறுவனத்துக்கு மாற்றியுள்ளது. இது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. பழைய ரிலையன்ஸ் கன்சூமர் பிராடக்ட்ஸ் (RCPL) கலைக்கப்பட்டது. இதன் மூலம் கேம்பா பானங்கள், Sure தண்ணீர், ஸ்பின்னர் ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ், சில் ஜாம், லோட்டஸ் சாக்லேட், அலன்ஸ் பக்ல்ஸ் சிப்ஸ், வெல்வெட் பர்சனல் கேர், டியாரா பியூட்டி போன்ற பிராண்டுகள் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் கீழ் இல்லாமல் நியூ RCPL கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேரடி கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications