இந்தியாவின் மிகப்பெரிய வரத்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவின் தடைக்கு பின்பும் தொடர்கிறது. அமெரிக்க அரசு சமீபத்தில் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தும் காரணத்தால் டிரம்ப் நிர்வாகம் Rosneft மற்றும் Lukoil ஆகிய நிறுவனங்களிடம் இருந்து எந்தொரு நாடும், எந்தொரு நிறுவனமும் வர்த்தகம் செய்ய கூடாது என வர்த்தக தடையை விதித்தது.
இந்த நிலையிவ் அமெரிக்கா விதித்த தடையில் இருந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு மாத காலம் அவகாசம் பெற்றுள்ளது என எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு தரப்பில் இருந்தும் சரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தரப்பில இருந்தும் சபி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ரிலையன்ஸ் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருக்கும் நிலையில், இந்நிறுவனம் தனது எரிபொருள் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக நிலையான கச்சா எண்ணெய் சப்ளை,குறைவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய ரோஸ்நெஃப்ட் உடன் நீண்டகால ஒப்பந்தம் செய்து கொண்டது. தற்போது அமெரிக்காவின் தடையால் இந்த சப்ளை பாதிக்கப்பட்ட நிலையில் டிரம்ப் அரசு கொடுத்துள்ள இந்த அவகாசம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உதவும்.
ரிலையன்ஸ் ரோஸ்நெஃப்ட்டுடன் செய்து கொண்டுள்ள நீண்டகால ஒப்பந்தம் மூலம் தினசரி 5 லட்சம் பேரல் ரஷ்ய எண்ணெய் வாங்குகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் 14 லட்சம் பேரல் திறன் கொண்ட சுத்திகரிப்பு வளாகத்திற்கு இந்த சப்ளை மிகவும் முக்கியமானது.
அக்டோபர் மாதம் அமெரிக்கா அரசு ரோஸ்நெஃப்ட் மீது தடை விதித்தது, தற்போது ரிலையன்ஸ் நவம்பர் 21 வரையில் பரிவர்த்தனைகளை முடிக்க அவகாசம் அளித்தது. இதேவேளையில் நவம்பர் 22 முதல் ரிலையன்ஸ் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தில் இருந்து சுமார் 15 கார்கோ கப்பல் கச்சா எண்ணெய் பெற்றுள்ளது என க்ளெப்பர் தரவுகள் கூறுகிறது. ஆனால் ரிலையன்ஸ் இவை ஏற்கனவே செய்யப்பட்ட ஆர்டர்கள் என்று கூறியது.
அமெரிக்க தடைக்கு பின்பு ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டும் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்யும் ரஷ்யாவுக்கு வருமானம் என்பதால் இந்த ஒரு மாத அவகாசம் ரஷ்யாவுக்கு ஜாக்பாட் தான்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications