சாட் ஜிபிடி மற்றும் கூகுளின் ஜெமினி போன்றவற்றுக்கு போட்டியாக ஹனூமான் என்ற செயற்கை நுண்ணறிவு மாடலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. மார்ச் மாதத்தில் இது வெளியிடப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஹனூமான் மாடல்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அண்மை காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற உரையாடல் அடிப்படையிலான ஏஐ தளம் அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கியது.

அதேபோல், கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரில் தங்களின் செயற்கை நுண்ணறிவு கருவியை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் தற்போது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி என்னும் பெயரில் செயற்கை நுண்ணறிவு கருவியை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தியாவின் 9 ஐஐடிக்களுடன் கைக்கோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதற்காக ஹனூமான் என்ற மாடலை உருவாக்கியுள்ளது. 22 இந்திய மொழிகளில் செயல்பட கூடிய இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என கூறப்படுகிறது.
1.5 பில்லியன் முதல் 40 பில்லியன் அளவுருக்கள் வரையிலான இந்த மொழி மாதிரி சுகாதாரம் , நிர்வாகம், நிதி சேவைகள் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பெரும் புரட்சி ஏற்படுத்தும் என தெரிகிறது. மும்பை ஐஐடி மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கியமான இடத்திற்கு செல்லும்.
முதலில் 11 மொழிகளில் இது பதில் அளிக்கும் என்றும் படிப்படியாக 22 மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. text-to-text, text-to-speech, text-to-video ஆகிய முறைகளில் இதில் செயல்படும் திறன் கொண்டது. ஓபன் சோர்ஸ் முறையில் அறிமுகம் செய்யப்படுவதால் மற்ற ஆய்வாளர்களும் இதனை எளிதில் பயன்படுத்த முடியும்.
இந்த மாடல் வெற்றி அடைந்தால் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏஐ சாட் பாட்டை பயன்பாட்டுக்கு கொண்டதில் மிகப்பெரிய பங்கை கொண்டிருக்கும். ஏற்கனவே இந்தியாவில் சர்வம், குரிட்ரம் போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளை வடிவமைத்து வருகின்றன.
லேங்குவேஜ் மாடல்கள் என்றால் என்ன?: லார்ஜ் லேங்குவேஜ் மாடல்கள் அதாவது பெரிய அளவிலான மொழி மாதிரிகள் பெரிய அளவிலான உரையை ஆழமாக கற்று அதன் அடிப்படையில் செயல்படுகின்றன.
பெரிய அளவிலான எழுத்துக்களை தொகுத்து அதன் கட்டமைப்பையும் அர்த்தத்தையும் புரிந்து கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலம் இவை நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன. பொதுவாக ஓபன் டெக்ஸ்ட் மற்றும் பொதுவான கிரால் கார்பஸ் போன்ற பெரிய தரவு தொகுப்புகளை இவை பயன்படுத்துகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications