டெல்லி: இந்தியாவில் பேட்டரி உற்பத்தி தொடர்பான முக்கியமான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
மத்திய கனரக தொழில்துறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமான பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் பேட்டரிகளுக்கான நவீன ரசாயன செல்களை தயாரிக்க இருக்கிறது.

முன்னதாக செல்கள் தயாரிப்பு தொடர்பாக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டு அதில் ரிலையன்ஸ் எனர்ஜி பேட்டரி நிறுவனத்தை தேர்வு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம் 10GWh திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்துக்கு 18,100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக 2022 ஆம் ஆண்டிலேயே முதல் கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. அப்போது மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆலைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனை அடுத்து தற்போது ரிலையன்ஸ் உட்பட மொத்தம் நான்கு நிறுவனங்கள் ற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட இருக்கின்றன. மொத்தம் 50GWh திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி ஆலைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது .மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து விட்டன. இதற்கு ஏற்ற வகையில் பேட்டரி உற்பத்தியை ஊக்கப்படுத்த அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே மின்சார வாகனத்திற்கான பேட்டரிகளை உற்பத்தி செய்ய தேவையான 35 பொருட்களுக்கு அரசு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தது.
இதன் மூலம் இந்தியாவில் லித்தியம் இயான் பேட்டரிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய இந்த பேட்டரிகள் இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என அரசு எண்ணுகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. இதனால் பேட்டரிகளின் தேவையும் உயர்ந்து வருகிறது. எனவே தான் இந்த துறையில் உற்பத்தியை ஊக்குவித்தால் அது வேலைவாய்ப்பையும் பெருக்கி பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என அரசு நம்புகிறது.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications