குஜராத்: ரிலையன்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த சோலார் பேனல்களை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை வழங்கும் நிறுவனத்திடம் மிகப்பெரிய ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது நிலக்கரி இல்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு நிறுவனங்களும் தற்போது சூரிய ஒளிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளன.

ஆங்காங்கே பல்வேறு நிறுவனங்கள் சார்பில் சோலார் மின் உற்பத்தி பூங்காக்களும் அமைக்கப்பட்டு வருவதை நாம் காண முடிகிறது. இதனிடையே ரிலையன்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த லின்டன் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் மிகப்பெரிய ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
லின்டன் டெக்னாலஜிஸ் நிறுவனம் சோலார் பேனல்களை தயாரிப்பதற்கான செல்களுக்கு தேவையான வேப்ஃபர்களை உற்பத்தி செய்யும் நம்பர் ஒன் சீன நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்திடம் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய ஆர்டரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 10 கிகாவாட் அளவிலான மின்சார உற்பத்திக்கு தேவையான சோலார் பேனல்களை அமைப்பதற்கான வேப்ஃபர்களை தயாரிப்பதற்கான இயந்திரங்களை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் தான் இது என தெரியவந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது சோலார் மின் உற்பத்திகான பேனல்கள் சார்ந்த செல்கள் மற்றும் ஃவேப்பர்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அதானி நிறுவனம் இந்த துறையில் கால் பதித்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதானி நிறுவனம் இரண்டு கிகாவாட் அளவிலான சோலார் மின் உற்பத்தி பூங்காக்களை அமைத்துள்ளது. கூடிய விரைவில் இதனை 8 கிகாவாட் என்ற அளவினை எட்ட முடிவு செய்துள்ளது. எனவே இந்த துறையில் அடுத்த போட்டியாளராக இருப்பது ரிலையன்ஸ் நிறுவனம் தான்.
அதானி நிறுவனத்தை மிஞ்சும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் லின்டன் டெக்னாலஜிஸ் குழுமத்திடம் 10 கிகாவாட் அளவிலான சோலார் பேனல்களை அமைப்பதற்கான மூலப் பொருட்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் 20 கிகாவாட் சோலார் மாட்யூல் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. இதற்கான இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு ஏற்கனவே இந்த நிறுவனம் 20 சப்ளையர்கள் இடம் ஒப்பந்த மேற்கொண்டுள்ளது.
உலக அளவில் சோலார் பேனல்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் வேப்ஃபர்கள் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் சீனாவிடம் மட்டுமே இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை விரைவில் ரிலைன்ஸ் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரும் என சொல்லப்படுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications