போட்டியை கண்டு அஞ்சியது கிடையாது: எலான் மஸ்கிற்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பதில்..!!

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இணைய சேவை வழங்க விண்ணப்பம் செய்து இதுவரை அனுமதி கிடைக்காமல் உள்ளது. இதற்கு முகேஷ் அம்பானி போன்ற பெரு முதலாளிகளே காரணம் என எலான் மஸ்க் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் முதன்முறையாக ரிலையன்ஸ் நிறுவனம் பதிலடி தந்துள்ளது.

எலான் மஸ்க், இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவைகள் தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதை குறிப்பிட்டு ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணைய பயனர்கள் இருக்கும் சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைய தடை செய்வதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட சேட்டிலைட் இணைய சேவைகளின் போட்டியை முழுமையாக வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

போட்டியை கண்டு அஞ்சியது கிடையாது: எலான் மஸ்கிற்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பதில்..!!

ரிலையன்ஸ் நிறுவனம் ஒருபோதும் போட்டியை கண்டு அஞ்சியது கிடையாது என்றும், வாடிக்கையாளர்களுக்கு யார் சிறந்த சேவையை வழங்குகிறார்கள் என்பதற்கான உண்மையான பரிசோதனையாகவே போட்டியை நாங்கள் பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2016 ஆம் ஆண்டில் ஜியோ நிறுவனம் கடுமையான போட்டிக்கு இடையே எந்தவொரு வாடிக்கையாளரும் இல்லாமல் புதிதாக தான் தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது என சுட்டிக்காட்டியுள்ளது.

Also Read

இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ உருவெடுத்துள்ளது, 530 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதோடு, உலகிலேயே மிகக் குறைந்த விலையில் தரமான டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் டேட்டா சேவையையும் வழங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே போட்டியை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளது. ஜியோ உள்பட எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் இந்திய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியபடி, உள்நாட்டு நிறுவனமானாலும் சரி, வெளிநாட்டு நிறுவனமானாலும் சரி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை செயல்முறைகள்தான் பொருந்தும் என்று ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜியோவின் சொந்த சேட்டிலைட் சேவைகளும் அரசாங்கத்தின் அனுமதிகளுக்காக காத்திருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

ஸ்டார்லிங்க் உட்பட சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் துறையில் வரக்கூடிய அனைத்து போட்டிகளையும் நாங்கள் வரவேற்கிறோம் என திட்டவட்டமாக கூறியுள்ளது. எலான் மஸ்கின் குற்றச்சாட்டுகளுக்கு முதன்முறையாக ரிலையன்ஸ் நிறுவனம் நேரடி பதில் தந்துள்ளது.

முன்னதாக எலான் மஸ்க் , ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் வர முடியாமல் தடுப்பது பெரு முதலாளிகள் என குற்றம்சாட்டிய அவர் பின்னர் முகேஷ் அம்பானி தான் இந்தியாவின் பிரதமர் என தெரியாமல் போய்விட்டது என பகிரங்கமாக சாடினார். இதற்கு மத்திய அரசு, அனைத்து நிறுவனங்களையும் சமமாகவே கருதுகிறோம் என்றும் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என்றும் பதில் அளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+