இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ரீடைல், டெலிகாம், டிஜிட்டல் சேவைகள் என பல துறையில் இயங்கினாலும் இவருடைய ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு அடிப்படை நிதி ஆதாரமாக இருப்பது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் வர்த்தகம் தான்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் ரீடைல் விற்பனையில் அரசு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தால் பெரிய அளவில் வளர முடியவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ரீடைல் விற்பனை மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய BP நிறுவனத்திடம் கூட்டணி வைத்து.

இந்த கூட்டணிக்கு பின்பு படிப்படியாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானிக்கு இப்போது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. இது மட்டும் நடந்திட்டா போதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தூக்கி சாப்பிட்டுவிடும்.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான PJSC ரோஸ்நெஃப்ட் இந்தியாவில் உள்ள தனது நயாரா எனர்ஜி நிறுவனத்தில் வைத்திருக்கும் 49.13% பங்குகளை விற்பனை செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், ரிலையன்ஸ் இந்தியாவின் முதன்மை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக மாறும்.
நயாரா எனர்ஜி:
இந்தியாவில் எஸ்ஸார் ஆயில் என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தை 2016-17ல் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் மற்றும் அதன் முதலீட்டாளகர் கூட்டணி பெரும் தொகையை கொடுத்து வாங்கியது. இதன் பின்பு நயாரா எனர்ஜி ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 8 வருடத்தில் ரோஸ்நெஃப்ட் நிர்வாகத்தின் கீழ் நயாரா எனர்ஜி ஆண்டுக்கு 20 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஆலை மற்றும் இந்தியாவில் 6,750 பெட்ரோல் பம்புகளை இயக்கும் மாபெரும் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துள்ளது.
நயாரா எனர்ஜி-யில் தற்போது ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் தற்போது 49 சதவீத பங்குகளை வைத்துளஅளது. இதை ரிலையன்ஸ் வாங்குவதன் மூலம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை (IOC) பின்னுக்குத் தள்ளி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சந்தையில் முதலிடம் பிடிக்கும். ரிலையன்ஸ் தற்போது குஜராத்தின் ஜாம்நகரில் 68.2 மில்லியன் டன் திறன் கொண்ட இரு சுத்திகரிப்பு ஆலைகளை கொண்டு உள்ளது.
ரோஸ்நெஃப்ட் ஏன் பங்குகளை விற்கிறது?:
ரஷ்யா - உக்ரைன் மீதான போரின் காரணமாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள், ரோஸ்நெஃப்ட் நிறுவனம் இந்தியாவில் இருந்து முழுமையாக லாபத்தை திரும்பப் பெற முடியவில்லை. இதனால், வெளிநாட்டு வருவாய் அல்லது சர்வதேச அளவில் செயல்படும் நிறுவனங்களை கைகழுவ முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் நயாரா எனர்ஜி-யில் இருக்கும் தனது பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த ஒரு வருடத்தில் ரோஸ்நெஃப்ட் அதிகாரிகள் இந்தியாவுக்கு மூன்று முறை (அகமதாபாத் மற்றும் மும்பை) வந்துள்ளனர். இந்த பயணத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்காக முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ரோஸ்நெஃப்ட் நயாரா எனர்ஜிக்கு 20 பில்லியன் டாலர் கோரிய நிவையில், இது மிக அதிகமாக உள்ளதாக ரிலையன்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதை மதிப்பை 17 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டாலும் சந்தையில் வாங்குவதற்கு ஆள்ளில்லை என்பதால் முகேஷ் அம்பானி காத்திருந்து முடிவு செய்ய திட்டமிட்டு உள்ளார். இதனால், இந்த ஒப்பந்தம் இன்னும் உறுதியாகவில்லை.

ரிலையன்ஸுக்கு ஏன் முக்கியம்?:
நயாராவின் 6,750 பெட்ரோல் பம்புகள், ரிலையன்ஸின் தற்போதைய 1,972 பம்புகளுடன் இணைந்தால், ரீடைல் எரிபொருள் விற்பனை சந்தையில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை முகேஷ் அம்பானியால் பெற முடியும். ரிலையன்ஸ் பொருத்த வரையில் எண்ணெய் சுத்திகரிப்பு மட்டும் லாபகரமான வர்த்தகமாக இருக்க முடியாது, ரீடைல் வர்த்தகம் இல்லையெனில் லாபம் அளவீடுகளை பெரிய அளவில் உயர்த்த முடியாது.
இதேபோல் நயாராவின் வதினார் சுத்திகரிப்பு ஆலை, ரிலையன்ஸின் ஜாம்நகர் ஆலைகளுக்கு அருகில் உள்ளதால், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் கூடுதல் மதிப்பு உருவாக்க முடியும். இதனால் முகேஷ் அம்பானி இந்த நிறுவனத்தை கைவிடமாட்டார் என தெரிகிறது.
அதானி தலையீடு:
இதேவேளையில் எண்ணெய் வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் அதானி குழுமத்திற்கு இது பெரிய வாய்ப்பாக இருக்கும். ஆனால் அதானி குழுமம் இந்த முயற்சியை செயல்படுத்துமா என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications