இந்திய ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கம் போல் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு ஆகியவை ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் தற்போது சீனாவின் SAIC குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரிட்டன் ஆட்டோமொபைல் நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்திய வர்த்தகம் குறித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளது.

சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC குழுமத்தின் கீழ் இருக்கும் MG MOTOR இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கிய காலத்தில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கடைத்தது. ஆனாலும் வர்த்தகத்தையும் விற்பனையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. MG Motor அறிமுகம் செய்த காலத்தில் தான் KIA அறிமுகமாகி பெரும் வெற்றியை சுவைத்து வருகிறது.
இந்த நிலையில் MG MOTOR நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, இந்த பங்கு விற்பனைக்கான பேச்சுவார்த்தையை துவங்கி பல நாட்கள் ஆன நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. MG மோட்டர் தனது நிறுவன பங்குகளை வாங்குவதற்கான சிறந்த முதலீட்டாளரை தேடி வருகிறது.
MG Motor நிர்வாகம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ குரூப், ப்ரேம்ஜி இன்வெஸ்ட், JSW குரூப் போன்ற முன்னணி நிறுவனங்களிடம் பங்கு விற்பனைக்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது. MG Motor நிறுவனத்திற்கு தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய உடனடியாக பண தேவை இருக்கும் காரணத்தால் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் சீன நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டை திரட்டுவதில் பெரிய நெருக்கடி இருக்கும் காரணத்தால். சீனாவில் MG Motor-ன் உரிமையாளரான SAIC செழிப்புடன் இருந்தாலும் இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் பங்குகளை விற்பனை செய்து பணத்தை திரட்ட முடிவு செய்துள்ளது.
MG Motor நிறுவனத்தின் இந்திய சிஇஓ கூறுகையில் கார்கள் மட்டும் அல்லாமல் உற்பத்தி, நிர்வாகம் என அனைத்தையும் இந்தியமயமாக்க உள்ளதாக தெரிவித்தார். MG Motor அடுத்த 2- 4 வருடத்தில் உள்நாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்து சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது.

MG Motor நிறுவனம் தற்போது குஜராத் மாநிலத்தின் Halol பகுதியில் தொழிற்சாலை வைத்து வருடத்திற்கு 1.2 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டு உள்ளது. இதற்கிடையில் 2வது தொழிற்சாலையும் இதே பகுதியில் வரும் வேளையில் வருடத்திற்கு 3 லட்சம் கார்களை தயாரிக்க உள்ளது MG Motor. இந்நிறுவனம் 4-5 கார்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. 2028க்குள் இந்நிறுவனத்தில் சுமார் 20000 பேர் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல துறைகளில் வர்த்தகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ ஆகியவை தற்போது ஆட்டோமொபைல் துறையிலும் MG MOTOR வாயிலாக இறங்க உள்ளதாக தெரிகிறது. எலக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக வர்த்தகத்தை பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் MG MOTOR உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்தால் டாடா மோட்டார்ஸ்-க்கு பிரச்சனை தான்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications