முகேஷ் அம்பானி கொடுத்த குட்நியூஸ்.. 1:1 போனஸ் பங்குகளுக்குப் பச்சைக்கொடி..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் நிர்வாக குழுமம் இன்று (ஆகஸ்ட் 5) பெரிதும் எதிர்பார்த்த 1:1 போனஸ் பங்குகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2017 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இந்நிறுவனம் முதல் முறையாக போனஸ் பங்குகளை வழங்குகிறது.

இந்த 1:1 போன்ஸ் பங்குகள் ஒப்புதல் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குதாரர்களும் தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் இலவசமாக ஒரு பங்கைப் பெறுவார்கள். இந்த போனஸ் பங்குகள் எப்போது வழங்கும் என்ற பதிவு தேதியை ரிலையன்ஸ் நிர்வாகம் பின்னர் அறிவிக்கும்.

முகேஷ் அம்பானி கொடுத்த குட்நியூஸ்.. 1:1 போனஸ் பங்குகளுக்குப் பச்சைக்கொடி..!


முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்: இந்த 1:1 போனஸ் மூலம் ரிலையன்ஸ்-ன் 35 லட்சம் பங்குதாரர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு பங்கு கூடுதலாக இலவசமாகப் பெற உள்ளனர். உதாரணமாக குமார் என்பவர் 1000 ரிலையன்ஸ் பங்குகள் வைத்திருந்தால் 1:1 போனஸ் மூலம் 2000 பங்குகளை வைத்திருப்பார்.

போன்ஸ் பங்குகள் மூலம் பங்குகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் முதலீட்டு மதிப்பு அதிகரிக்காது. வழக்கம் போது தினசரி வர்த்தகத்தில் பங்கு விலை அதிகரிக்கும் போது இதன் விலையும் அதிகரிக்கும். இந்த போனஸ் பங்குகள் மூலம் சந்தையில் குறைந்த விலையில் அதிகப்படியான பங்குகள் வர்த்தகமாகும். இதன் மூலம் ரிலையன்ஸ் பங்குகள் வேகமா வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது.

இது மட்டும் அல்லாமல் இன்றைய நிர்வாக குழுக் கூட்டத்தில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.15,000 கோடியிலிருந்து ரூ.50,000 கோடிக்கு அதிகரிக்கத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதுவும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஐந்தாவது முறையாக போனஸ் பங்குகளை வழங்கியுள்ளது. இதற்கு முன்பு 1983, 1997, 2009 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் போனஸ் பங்குகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 15.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 23.3 சதவீதம் அதிகரித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் தற்போது எண்ணெய் சுத்திகரிப்பு, டெலிகாம் சேவை, ரீடைல் வர்த்தகம் ஆகிய 3 முக்கிய பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நிதி சேவை பிரிவுகள் தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்திற்குள் சேராது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+