சென்னை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தனது இயக்குநர் குழு கூட்டத்தை நடத்த உள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில், ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து பரிந்துரையை ஆலோசித்து, ஒப்புதல் அளிக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பின்னர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலை 2.6% வரை உயர்ந்து ரூ.3074.80 அளவீட்டை எட்டியது. இன்றைய 2.6% உயர்வுக்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்கு ரூ. 3,217.90 என்ற வரலாற்று உச்சத்தைத் தொடர்ந்து 4.6% மட்டுமே குறைவாக உள்ளது, இந்த வரலாற்று இது ஜூலை 8, 2024 அன்று தொட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 52 வாரங்களில் குறைந்த அளவான ரூ. 2,221.05-லிருந்து 38%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த 1 ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 24% உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை 19% உயர்ந்துள்ளது.
போனஸ் பங்குகள் என்பது ஒரு நிறுவனம் தனது தற்போதைய பங்குதாரர்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல் வழங்கும் இலவசமான கூடுதல் பங்குகளாகும். இந்த போனஸ் பங்குகள் ஒரு பங்குதாரர் ஏற்கனவே வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் விநியோகிக்கப்படுகின்றன.
தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ள 1:1 விகிதம் அடிப்படையில், ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு போனஸ் பங்கு வழங்கப்படும்.
ஒரு நிறுவனம் 1:1 போனஸ் பங்கு வழங்க அறிவித்தால், 100 பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர், கூடுதல் 100 பங்குகளைப் பெறுவார். இதனால் அவர்களின் மொத்த பங்கு இருப்பு 200 பங்குகளாகும். ஆனால் முதலீட்டு மதிப்பு எந்த வகையிலும் மாறாது. 100 பங்குகளின் மதிப்பு 100000 ஆக இருந்தால் போனஸ் பங்குகள் வந்த பின்பு 200 பங்குகளின் மதிப்பு இதே 100000 ரூபாயாக மட்டுமே இருக்கும். இதனால் மொத்த முதலீட்டு மதிப்பு கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications