முகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. தொடர் அதிரடி முடிவுகள்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிடைல் வர்த்தகம் முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முதல் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறார். ஆனால் கடந்த 5 வருடமாகக் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கவனிக்காமல் ரீடைல் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தை மட்டுமே முழுமையாகக் கவனித்து வருகிறார்.

அதிலும் ஜியோவின் வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த 10 வருட திட்டத்தை மொத்தமாக மாற்றிவிட்டார் முகேஷ் அம்பானி. இத்திட்டத்திற்காகக் கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 3 நிறுவனங்களைக் கிட்டத்தட்ட மொத்தமாக வாங்கியுள்ளார்.

90 சதவீத பங்குகள்

90 சதவீத பங்குகள்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் e-learning பிரிவில் பல்வேறு சேவைகளை அளிக்கும் Funtoot நிறுவனத்தைச் சுமார் 71.64 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 90.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இதுகிட்டதட்ட 10 மில்லியன் டாலர் மதிப்புடையது.

மறைமுக முதலீடு

மறைமுக முதலீடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த நிறுவனத்தை நேரடியாக முதலீடு செய்யவில்லை, சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் கைப்பற்றிய Embibe என்னும் நிறுவனத்தின் வாயிலாகத் தான் Funtoot நிறுவனத்தை வாங்கியுள்ளது.

இந்தத் தகவலைப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

கூடுதல் 10 கோடி முதலீடு

கூடுதல் 10 கோடி முதலீடு

இதுமட்டும் அல்லாமல் Embibe நிறுவனம் அடுத்தச் சில மாதங்களுக்குள் கூடுதலாக 10 கோடி ரூபாய் முதலீடு செய்து 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது. இந்த 10 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் பணிகள் 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது.

Funtoot நிறுவனத்தின் தாய் நிறுவனம் eDreams Edusoft Pvt. Ltd, இந்த நிறுவனத்தில் தான் தற்போது ரிலையன்ஸ் தலைமையிலான Embibe 1.64 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

 

Funtoot

Funtoot

2010ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் பள்ள மாணவர்களுக்குக் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி, ஆய்வு மற்றும் சோதனை தரவுகளை டிஜிட்டல் முறையில் வழங்குகிறது.

3வது நிறுவனம்

3வது நிறுவனம்

டிசம்பர் மாதத்தில் மட்டும் முகேஷ் அம்பானி சுமார் 3 நிறுவனங்களை வாங்கிக் குவித்துள்ளார். டிரோன்களைத் தயாரிக்கும் Asteria ஏரோஸ்பேஸ் மற்றும் SaaS சேவை பிரிவில் இருக்கும் NowFloats ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது Funtoot நிறுவனத்தை 3வது நிறுவனமாகக் கைப்பற்றியுள்ளது.

Embibe நிறுவனத்தின் மூலமாகத் தான் ரிலையன்ஸ் தனது டிஜிட்டல் கல்வி தொழில்நுட்ப தளத்தை மேம்படுத்தி வருகிறது. Embibe நிறுவனத்தில் ரிலையன்ஸ் கிட்டத்தட்ட 180 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+