ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் டிசம்பர் காலாண்டில், 15% சரிவினைக் கண்டு, 15,792 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 18,549 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது நிறுவனத்தின் செயல்பாடுகள் சில துறைகளில் குறைந்துள்ள நிலையில், இதன் லாபமும் குறைந்துள்ளது. இது அதன் எண்ணெய் முதல் கெமிக்கல் வணிகம் வரையில் சில துறைகளில் சற்றே சரிவினைக் கண்டுள்ள நிலையில், அதன் லாபமும் சரிவினைக் கண்டுள்ளது.
வலுவான தேவை -வருவாய்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுத்திகரிப்பு பொருட்கள் மூலம், வலுவான மார்ஜினை கண்டுள்ளது. இது வலுவான எரிபொருள் தேவைக்கு மத்தியில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.
இதன் செயல்பாட்டு வருவாய் விகிதமானது 15% அதிகரித்து, 2,20,592 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1,91,271 கோடி ரூபாயாக இருந்தது.
பங்கு விலை சரிவு
இதற்கிடையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது 1.1% குறைந்து, 2443 கோடி ரூபாயாக முடிவடைந்துள்ளது. சந்தைக்கு பிறகான இந்த முடிவினால், திங்கட்கிழமையன்று இதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பாக செயல்பட்டுள்ளோம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானி, இந்த சவாலான காலகட்டத்திலும் வலுவான செயல்பாட்டினை கண்டுள்ளோம். எங்கள் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒருங்கிணைந்த எபிட்டா விகிதம் அதிகரித்துள்ளது.
அர்பு விகிதம்
ஆயில் முதல் கெமிக்கல் வரையிலான வணிகத்தில் தேவை வலுவாக இருந்தது. இதற்கிடையில் தான் நிறுவனம், வலுவான செயல்பாட்டினை கண்டுள்ளது. இதன் எபிட்டா விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 13.5% அதிகரித்து, 38,460 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் சந்தா அடிப்படையில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் அர்பு விகிதம் 17.5% அதிகரித்துள்ளது.
சில்லறை விற்பனை பிரிவு
இதே சில்லறை விற்பனை பிரிவில் புதிய கடைகளை சேர்த்தல் என பல பிரிவிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. இதே கேஸ் விலை மற்றும் எரிபொருள் பிரிவு என பல பிரிவுகளில் வளர்ச்சியானது அதிகரித்துள்ளது. மொத்தத்தில் பல துறைகளிலும் லாபமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு சில்லறை வணிகங்களையும் கையப்படுத்தி வருகின்றது.
மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்
இந்த காலாண்டு முடிவுக்கு மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் 20,000 கோடி ரூபாய் திரட்டவுள்ளது என அறிவித்துள்ளது. இது குறித்தான முழுமையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது, கெளதம் அதானி நிறுவனம் 20,000 கோடி ரூபாய் நிதியினை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பும் வந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications