இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை விகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பைனான்சியல் நிறுவனத்தை தனியாக பிரித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் முதலீட்டு மதிப்பை கொடுத்துள்ளது.
அடுத்த 2 வருடத்தில் ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் O2C என் தனித்தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிட முகேஷ் அம்பானி திட்டமிடுவார் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹோல்டிங் நிறுவனமாக மாறும் வாய்ப்பு கொண்டு உள்ளது.

மறுபுறம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கங்களை செய்து வரும் வேளையில் அதன் வர்த்தகம் வருமானம், மதிப்பீடு என அனைத்தும் புதிய உச்சத்தை அடைய உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு Fortune Global 500 பட்டியலில் பெரிய அளவில் முன்னேறியுள்ளார்.
பார்ச்சூன் குளோபல் 500 வெளியிட்டுள்ள சமீபத்திய பட்டியலில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் தனது முதல் இடத்தை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தக்கவைத்துள்ளது. இதேவேளையில் சர்வததேச அளவில் 16 இடங்கள் முன்னேறி 88வது இடத்தைப் 500 நிறுவனங்கள் இருக்கும் பார்ச்சூன் குளோபல் 500 பிடித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2022 தரவரிசையில் 104 வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் 2023 தரவரிசையில் 88 வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 2021ல் 155வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 2 வருடத்தில் தனது அதிரடி வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் 67 இடங்கள் முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டு ஃபார்ச்சூன் குளோபல் 500 தரவரிசையில் 8 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 48 இடங்கள் முன்னேறி 94வது இடத்தில் உள்ளது.

இதை தொடர்ந்து லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (LIC) ஒன்பது இடங்கள் சரிந்து 107வது இடத்தைப் பிடித்தது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONCG) 158வது இடத்தை பிடித்தது, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) 233வது இடத்திலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 235வது இடத்தையும் பிடித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் 33 இடங்கள் முன்னேறி 337வது இடத்தையும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 84 இடங்கள் முன்னேறி 353வது இடத்தையும் பிடித்துள்ளது. ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 20 ஆண்டுகளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது, இதுவரை எந்தொரு தனியார் நிறுவனமும் இந்த சாதனையை படைத்தது இல்லை.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications