சைலென்டாக முகேஷ் அம்பானி செய்த வேலையைப் பாத்தீங்களா..?

ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு ரஷ்யா மீது அதிகளவிலான தடையை விதித்த ஐரோப்பா, டிசம்பர் 2022 முதல் கச்சா எண்ணெய் வாங்குவதையும், பிப்ரவரி 2023ல் இருந்து டீசலை வாங்குவதை மொத்தமாக நிறுத்த தடை செய்ய உள்ளது.

ஐரோப்பா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகள் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவதை நிறுத்த உள்ள நிலையில், ரஷ்யா புதிய வர்த்தக வாய்ப்புகள் அனைத்தையும் தேடிக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளது.

இந்த மிகப்பெரிய வாய்ப்பை விட்டு வைப்பாரா முகேஷ் அம்பானி..?!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்வாகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது உற்பத்தியை அதிகரிக்கவும் ஏற்றுமதி வாய்ப்புகளைக் கூடுதலாகப் பெற வேண்டும் என்பதற்காக ரஷ்யாவில் உருவாகியிருக்கும் வாய்ப்புகளை கப்-எனப் பிடித்துக்கொண்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

ரஷ்யாவிடம் இருந்து மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போர்-க்கு பின்பு போடப்பட்ட தடையின் காரணமாகப் பல முக்கியமான எரிபொருளை வாங்குவதையும், வாங்கும் அளவுகளைக் குறைத்துள்ளது.

இதனால் ரஷ்யா தற்போது பல நாடுகளுக்கும், பல நிறுவனங்களுக்குத் தன்னிடம் இருக்கும் அனைத்து விதமான எரிபொருளையும் விற்பனை செய்யத் தயாராக உள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து naphtha-வை அதிகளவில் வாங்கிக் குவிக்கத் துவங்கியுள்ளதாக Refinitiv தரவுகள் கூறுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் துவங்கிய காலத்திலேயே ரிலையன்ஸ் பிரிட்டனுக்கு டீசல் ஏற்றுமதி செய்து அதிக லாபத்தைப் பார்த்தது.

naphtha வாங்கும் ரிலையன்ஸ்

naphtha வாங்கும் ரிலையன்ஸ்

இந்த நிலையில் ரஷ்யா புதிய நுகர்வோரைத் தேடி அலைந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உள்ளது, செப்டம்பர் - அக்டோபர் மத்தியிலான காலத்தில் இந்தியா மொத்தம் 410,000 டன் naphtha வாங்கியுள்ளது.

150,000 டன் naphtha

150,000 டன் naphtha

இதில் சுமார் 150,000 டன் naphtha-வை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரஷ்ய துறைமுகங்களான Ust-Luga, Tuapse மற்றும் Novorossiysk ஆகியவற்றில் இருந்து இவ்விரு மாதத்தில் நேரடியாக இறக்குமதி செய்துள்ளதாக Refinitiv தரவுகள் கூறுகிறது.

பெட்ரோகெமிக்கல்

பெட்ரோகெமிக்கல்

naphtha மூலம் பல்வேறு பெட்ரோகெமிக்கல் பொருட்களைத் தயாரிக்க முடியும்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 4 வருடத்தில் ஒரு முறை மட்டுமே வாங்கியுள்ளது, அதிலும் குறிப்பாக 2020, 2021ல் ஒரு டன் கூட ரஷ்யாவில் இருந்து naphtha-வை வாங்கவில்லை.

இந்தியா, சீனா

இந்தியா, சீனா

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த பின்பு இந்தியா, சீனா மற்றும் சில முக்கிய ஆசிய சந்தை எண்ணெய் வர்த்தகர்களுக்கு naphtha உட்பட அனைத்து எரிபொருளையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது.

ஈராக், ரஷ்யா

ஈராக், ரஷ்யா

இதை ரிலையன்ஸ்-ம் பயன்படுத்தி வருவது முக்கியமானதாக விளங்குகிறது. ரிலையன்ஸ் ஏற்கனவே உலக நாடுகள் தடை செய்யப்பட்ட ஈராக் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த வந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் இருந்தும் இறக்குமதி செய்து வருகிறது.

ரிலையன்ஸ் O2C பிரிவு

ரிலையன்ஸ் O2C பிரிவு

இதன் மூலம் இனி வரும் காலாண்டுகளில் ரிலையன்ஸ் O2C பிரிவு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் மத்திய அரசு Windfall Tax விதித்தால் கட்டாயம் பாதிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+