இந்தியாவில் அதிக மதிப்புடைய நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் வேளையில், தற்போது கடன் சேவையில் இறங்க வேண்டும் என்பதற்காக மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் வேளையில் நிதி சேவைகள் மூலம் அதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளது, ரிலையன்ஸ்-ன் இப்புதிய கடன் சேவைகள் பிரிவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து தனியாக பிரிக்க முடிவு செய்து தனியாக இயக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான இறுதி முடிவை எடுக்க வருகிற மே 2 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எடுக்க உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மே 2 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனக்கு கடன் கொடுத்தவர்கள் முதல் பங்குதாரர்கள் வரையில் அடங்கிய நிர்வாக குழு கூட்டத்திற்கு அழைத்துள்ளது. மே 2 ஆம் தேதி நடக்கும் இந்த முக்கியமான கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Reliance Strategic Investments-ஐ தனியாக பிரிக்கவும், பிரித்த பின்பு Reliance Strategic Investments நிறுவனத்தின் பெயரை Jio Financial Services Limited என மாற்றவும் ஒப்புதல் அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
நிதி சேவை பிரிவு
நிதி சேவை பிரிவாக விளங்கும் Reliance Strategic Investments தற்போது தனது வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களுக்கு கடன் அளிக்கும் புதிய சேவையை வழங்க உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் தனது பொருட்களை வாங்குவோருக்கு கடன் கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
ஒரே குடைக்குள்
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் வர்த்தகம் அனைத்தும் கிளை நிறுவனங்களாக இருந்தாலும் ஒரே குடைக்குள் தான் உள்ளது. இந்த நிலையில் புதிய வர்த்தகம் சிறப்பாக வளர்ச்சி அடைந்தாலும் கூட ஐபிஓ வெளியிட முடியாமல் உள்ளது. உதாரணமாக ரிலையன்ஸ் ஜியோ.
முழு மதிப்பீடு
இதனால் ரிலையன்ஸ் சந்தை மதிப்பில் பெரிய அளவிலான வளர்ச்சி அடைய முடியாமலும் அதன் முழு மதிப்பீட்டை வெளிக்கொண்டு வர முடியாமல் ஒரு வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு உள்ளது ரிலையன்ஸ். இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் ரிலையன்ஸ் துவங்கும் புதிய நிதியியல் சேவை வர்த்தகத்தை தனி நிறுவனமாகவே பிரிந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குடையின் கீழ் இருந்து வெளியேற்ற முடிவு செய்து விரைவில் ஐபிஓ வெளியிடவும் முடிவு செய்து இந்த டீமெர்ஜ் செய்ய முடிவு செய்துள்ளது.
பங்கு பிரிப்பு
இந்த Demerge-ஐ எளிதாக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்கள் எத்தனை பங்குகள் வைத்திருக்கிறார்களோ, அதற்கு இணையாக தலா ஒரு Jio Financial Services Limited பங்குகளை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கேவி காமத் இதன் non-executive chairman ஆக இருக்க உள்ளார்.
JFS முதலீடுகள்
ரிலையன்ஸ் பைனான்சியல் சேவை பிரிவு Reliance Industrial Investments and Holdings Limited, Reliance Payment Solutions Limited, Jio Payments Bank, Reliance Retail Finance, Jio Information Aggregator Services, Reliance Retail Insurance Broking, ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
Jio Financial Services
இதற்காக தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் RIL பங்கு எண்ணிக்கைக்கு இணையாக Jio Financial Services Limited பங்குகளை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரிலையன்ஸ் பைனான்சியல் சேவை பிரிவு விற்றுமுதல் மார்ச் 31, 2022 வரையிலான காலத்தில் 1387 கோடி ரூபாயாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications