டெல்லி : தான் எந்த தொழில் தொடங்கினாலும் அதில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர் தான் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மந்த நிலையில் தான் உள்ளது. ஆனால் இது நிரந்தரம் அல்ல என்றும் கூறியுள்ளார்.
ஏனெனில் அரசு பொருளாதார நிலையை மேம்படுத்த தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளால் அடுத்து வரும் காலாண்டுகளில் பொருளாதாரம் மேன்மையடையும் என்றும் கூறியுள்ளாராம்.
பொருளாதார மந்தநிலை
இது குறித்து சவுதி அரேபியாவின் வருடாந்திர முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி பேசுகையில், பொருளாதாரம் மந்த நிலை என்பது சிறிது இருக்கதான் செய்கிறது. ஆனால் இது தற்காலிகமானது தான். இது விரைவில் சரியாகும் என்றும், இது எனது சொந்த கருத்து என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளும் அதன் முடிவைக் விரைவில் காணும் என்றும் தெரிவித்துள்ளார்.
தலைகீழான மாற்றம் காணும்
மேலும் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, வரும் காலாண்டில் அதன் தலைகீழான மாற்றம் காணும் என்று நான் நம்புகிறேன் என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அடுத்த தசாப்தம் பொருளாதார லட்சியத்தின் ஒரு புதிய தசாப்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் சவுதி அரேபியாவில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி இந்த ஆண்டு எஃப்.ஐஐ சிறந்த பேச்சாளராகவும் உள்ளார்.
தொடர்ச்சியான சரிவு
இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் சரிவைக் கண்டது. இதே கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது, ஆனால் நடப்பு ஆண்டில் 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது கடந்த 2013க்கு பிறகு மிகப் குறைந்த வளர்ச்சி என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
அரசின் நடவடிக்கைகள் கைகொடுக்கும்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கடனை புதுப்பிப்பதற்கும் அரசு தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் உத்தரவாதங்கள் மற்றும் பணபுழக்கத்தினை அதிகரிக்க தேவையான நடவடிக்கை, குறிப்பாக வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தல், கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்களைகள் நிச்சயம் பொருளாதாரம் மேம்பட கைகொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications