இந்தியாவில் டிஜிட்டல் சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இதற்கான டிஜிட்டல் கட்டமைப்புகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதில் முக்கியமாக கௌதம் அதானியின் அதானி குரூப் ஏற்கனவே டேட்டா டென்டர் அமைக்கும் திட்டத்தில் இருக்கும் வேளையில் அதானிக்கு போட்டியாக முகேஷ் அம்பானியும் தற்போது இறங்கியுள்ளார். இதற்காக கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் சென்னையில் முதல் டேட்டா சென்டரையும் அமைக்கப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் குழுமம், ப்ரூக்பீல்ட் இன்பராஸ்டக்சர் பார்ட்னர்ஸ், டிஜிட்டல் ரியாலிட்டி டிரஸ்ட் ஆகிய மூவர் கூட்டணியில் தலா 33.33 சதவீத பங்குகளை கொண்டு இயங்க உள்ளது. இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்கும் பணிக்காக மூவர் கூட்டணியில் special purpose vehicles (SPVs) உருவாக்கப்பட்டது அதில் ரிலையன்ஸ் 33.33 சதவீத பங்குகளை பெற உள்ளது.
இதில் டிஜிட்டல் ரியாலிட்டி டிரஸ்ட் நிறுவனம் கிளவுட் மற்றும் டேட்டா சென்டர் சேவைகளை அளிக்கும் பணிகளை செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது மற்றும் எதிர்கால தேவையை மனதில் வைத்துக்கொண்டு அதிநவீன டேட்டா சென்டரை அமைக்கும் முக்கியமான பணியில் இறங்க உள்ளது இக்கூட்டணி.
BAM Digital Realty என்ற பெயரில் ப்ரூக்பீல்ட் இன்பராஸ்டக்சர் பார்ட்னர்ஸ், டிஜிட்டல் ரியாலிட்டி டிரஸ்ட் ஆகியவை எற்கனவே கூட்டணியில் இருந்தது, தற்போது இக்கூட்டணியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து தலா 33.33 சதவீத பங்குகளை பெற்றுள்ளனர். இப்புதிய கூட்டணி நிறுவனத்தின் பெயர் Digital Connexion என மாற்றப்பட உள்ளது.
Digital Connexion தற்போது சென்னை மற்றும் மும்பையில் புதிதாத டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறது. முதலில் சென்னையில் இருக்கும் 100MW கேம்பஸ்-ல் 20MW கிரீன்பீல்ட் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்த டேட்டா சென்டர் கட்டுமான பணிகள் முடிக்கப்பட உள்ளது. Digital Connexion சமீபத்தில் மும்பையில் 2.15 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது, இதில் 40MW டேட்டா சென்டர் கட்டமைக்க உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளும், மத்திய அரசின் புதிய டேட்டா பாதுகாப்பு, டேட்டா சேமிப்பு விதிமுறைகள் மாற்றத்தின் காரணமாக நாட்டில் டேட்டா சென்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்காக கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் முதல் பல நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய டேட்டா சென்டரை கட்டமைக்க துவங்கியுள்ளது.
டேட்டா சென்டர் வர்த்தகம் மற்றும் அதை சார்ந்த வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சி அடுத்த பல வருடங்களுக்கு இந்தியாவில் இருக்கும் காரணத்தால் பெரும் பணக்காரர்களான கௌதம் அதானியின் அதானி குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இத்துறையில் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications