இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கவனத்தை பசுமை எரிசக்தி பக்கம் திருப்பியுள்ளது. உலகளவில் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு காரணமாக இருக்கும் கரியமிலவாயு வெளியீட்டை குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
2030க்குள் கரியமில வாயு வெளியீட்டை குறைப்பது என பல்வேறு நாடுகளும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளன. இதில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில் தான் ரிலையன்ஸ் குழுமம், குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய சோலார் கிராமத்தை அமைத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கட்டமைத்துள்ள இந்த சோலார் கிகா ஆலையில் நடப்பு நிதி ஆண்டிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த சோலார் ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பாக PV module, cell, wafers, polysilicon, glass ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டு நிதி அறிக்கையில் தங்களுடைய புதிய சோலார் ஆலை முதல் கட்டமாக செல் உற்பத்தியில் ஈடுபடும் என தெரிவித்துள்ளது.
மேலும் தங்கள் நிறுவனம் உற்பத்தி செய்த சோலார் பேனல்களுக்கு பிஐஎஸ் தரச் சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பசுமை எரிசக்தி துறை, தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் துறையாக இருக்கும் என கருதுகிறது. தங்களுடைய மற்ற தொழில்களை விட பசுமை எரிசக்தி துறை ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நம்புகிறது.
எனவே பசுமை எரிசக்தி துறையில் அதிக முதலீட்டையும் கவனத்தையும் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எலக்ட்ரோஐசர்கள் தயாரிப்பதற்கான தங்களுடைய ஆலைக்கு அரசின் நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் தான் இந்த மிகப்பெரிய ஆலை நிறுவப்பட்டிருக்கிறது. இதற்கு திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி காம்ப்ளக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நவீன முறையில் இந்த உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. குஜராத்தில் பசுமை எரிசக்தி துறை உற்பத்திக்காக மட்டும் அம்பானி 5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதி தான் இந்த சோலார் கிராமம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications