ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் இதில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் இறங்கினால் அந்த துறையில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் இறங்க உள்ளதாகவும், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டு இந்த துறையில் ஆழமாக களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விண்ணப்பம்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட அந்நிறுவனம் ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுக் கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட ரிலையன்ஸ் இரண்டு புதிய நிறுவனங்களை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 புதிய நிறுவனங்கள்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட ரிலையன்ஸ் டு லிஸ்ட் ஃபைனான்ஸ் சர்வீஸ் ஆர்ம் மற்றும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் என்று பெயரிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.1000 கோடி முதலீடு
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ.1,000 கோடி மூலதன அடிப்படையில் நிறுவப்பட உள்ளதாக தெரிகிறது. IRDAI விதிமுறைகளின்படி, ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு வணிகங்களுக்கான குறைந்தபட்ச செலுத்தப்பட்ட மூலதனம் தலா ரூ.100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தயார் நிலை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் வணிகத்தின் பிரிவு இன்னும் முறையாகத் தொடங்கவில்லை என்றாலும், அந்நிறுவனம் தொடங்கியவுடன் அதன் செயல்பாடுகளுக்குத் தயாராக இருக்கும் வகையில் அனைத்து உரிமங்களையும் பெற்று தயார் நிலையில் இருக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சவால்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட்டால், ஏற்கனவே இன்சூரன்ஸ் வணிகத்தில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் சவால் ஏற்படும் என்பதால் பல நிறுவனங்கள் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications