மும்பை: அண்மை காலமாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிவடைந்துள்ளன. இதனால் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய அடி வாங்கி இருக்கின்றன. இந்தியாவிலேயே அதிக மதிப்பீடு கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 50 பில்லியன் டாலர்கள் வரை சரிவை கண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாமல் தவிப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் அதிலிருந்து தற்போது 50 பில்லியன் டாலர்கள் வரை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. பெஞ்ச் மார்க் குறியீடான என்எஸ்ஈ நிப்டி 50 குறியீட்டை விட இதன் வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது என சொல்லப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பெருமளவிலான தொகையை திரும்ப பெற்றுவிட்டன. தங்கள் வசம் இருந்த கோடிக்கணக்கிலான பங்குகளையும் விற்பனை செய்து விட்டன.
இதனால் இந்திய பங்குச்சந்தை சரிவிலேயே காணப்படுகிறது. இதுவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு குறைந்ததற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக இந்த நிறுவனம் தாங்கள் கணித்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது எண்ணெய் மற்றும் ரசாயன தொழில்களுக்கான தேவை சற்றே குறைந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சரிவை கண்டுள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 2.72 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருந்த நிலையில் தற்போது 98.8 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 16ஆவது இடத்தில் இருந்த அம்பானி 17ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


Click it and Unblock the Notifications