இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சர்வதேச பருவகாலக் கூட்டம் 2021ல் பேசிய பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிலையன்ஸ் பங்குகள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
2021 சர்வதேச பருவகாலக் கூட்டம்
2021 சர்வதேச பருவகாலக் கூட்டத்தில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் கிரீன் எனர்ஜி திட்டத்தையும், அதற்காக ரிலையன்ஸ் நிர்வாகம் செய்ய உள்ள 75,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு குறித்தும் பேசினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் பகுதியில் இருக்கும் தனது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில், புதிதாகத் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் என்ற கிரீன் எனர்ஜி-க்கான தளத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்தார் முகேஷ் அம்பானி.
திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ்
இந்தத் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்தில் சுமார் 4 தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இத்திட்டத்திற்காகச் சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
450 ஜிகாவாட் மின்சாரம்
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் மட்டும் இந்த 4 தொழிற்சாலை வாயிலாக 2030ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் முதல் 450 ஜிகாவாட் புதுப்பிக்கப்பட்ட அதாவது கிளீன் எனர்ஜியை உருவாக்க முடியும் என அறிவித்துள்ளார்.
கிரீன் ஹைட்ரஜன்
இது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் கிரீன் ஹைட்ரஜன் எகோசிஸ்டத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்தார், இதோடு இந்தியாவின் பசுமை திட்டத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டாயம் பூர்த்தி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
4 புதிய தொழிற்சாலைகள்
முதல் தொழிற்சாலை: சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலை
இரண்டாவது தொழிற்சாலை: எலக்ட்ரிக் கார் முதல் அனைத்து பயன்பாட்டிற்கு மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரி தொழிற்சாலை
மூன்றாவது தொழிற்சாலை: பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யப் புதிய Electrolyser factory
நான்காவது தொழிற்சாலை: ஹைட்ரஜன் வாயுவை கார்களில் எரிபொருளாகப் பயன்படுத்தும் Fuel cell தயாரிக்கும் தொழிற்சாலை
முகேஷ் அம்பானி பேச்சு
முகேஷ் அம்பானியின் பேச்சுக்குப் பின்பு ரிலையன்ஸ் பங்குகள் தாறுமாறான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாகக் காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்கு 2,307.50 ரூபாய்க்குத் துவங்கப்பட்ட நிலையில், முகேஷ் அம்பானி பேச்சுக்குப் பின்பு 2,394.30 ரூபாய் வரையில் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
ரூ.16 லட்சம் கோடி சந்தை மதிப்பீடு
ரிலையன்ஸ் பங்குகள் 2,394.30 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்தது மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 16 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் நீண்ட கலாமாக எதிர்பார்த்து வரும் 2400 ரூபாய் அளவீட்டை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விரைவில் அடையும்.
முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு இன்று வர்த்தக முடிவில் 1.1 சதவீதம் அதிகரித்து 88.9 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications