இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து மாற்றுப் பாதையில் தனது வர்த்தகத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகக் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தில் அதிகளவில் முதலீடு தருகிறார்.
REC சோலார்
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி, சீன நிறுவனமான கெம்சீனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நார்வே நாட்டைச் சேர்ந்த REC சோலார் நிறுவனத்தைச் சுமார் 771 மில்லியன் டாலருக்கு கைப்பற்றி உள்ளதாக உறுதியான அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் அடுத்தச் சர்பரைஸ் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.
ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார்
REC சோலார் நிறுவனத்தைக் கைப்பற்றிய அறிவிப்புப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை அளித்துள்ள நிலையில் ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனத்தையும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் நேற்று அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி
அதாவது ஓரே நாளில் நார்வே நாட்டின் REC சோலார் நிறுவனத்தையும், இந்தியாவில் இருக்கும் ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனத்தையும் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். தற்போது போட்டி மிகுந்த சந்தையில் வர்த்தக விரிவாக்கத்திற்காக ஒரு நிறுவனத்தை வாங்குவதே பெரிய இதில் 2 நிறுவனத்தை வாங்கியது பெரிய விஷயமாக உள்ளது.
ஷாபூர்ஜி பலோன்ஜி
ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார் நிறுவனத்தில் ஷாபூர்ஜி பலோன்ஜி அண்ட் கோ மற்றும் குர்ஷெட் யஸ்தி தாருவாலா ஆகியோர் வைத்திருந்த 69.36 சதவீத பங்குகளை மொத்தமாக வாங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.
ஸ்டெர்லிங் அண்ட் வில்சன்
சோலார் வர்த்தகத்தில் ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் ஈபிசி பிரிவில் (engineering, procurement, construction) உலகின் முன்னணி நிறுவனமாகும். ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் இதுவரை 26 நாடுகளில் சுமார் 11 ஜிகாவாட் அளவிலான மின்சாரம் தயாரிற்கும் சோலார் பேனல்களை நிறுவியுள்ளது.
ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி
இவ்விரு நிறுனத்தின் மூலம் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி நிறுவனத்தின் வர்த்தகம் மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும். அதுமட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
ஜாக்பாட்
மேலும் REC சோலார் - ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் இணைப்பு மூலம் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி சோலார் பேனல் உற்பத்தி முதல் நிறுவும் பணி, மெயின்டனன்ஸ் பணிகள் வரையில் அடுத்தச் சில நாட்களில் இருந்து துவங்க முடியும் என்பதால் இது ஜாக்பாட் ஆகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications