இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020ல் கொரோனா மற்றும் லாக்டவுன் பாதிப்பு எதிரொலியாக மார்ச் மாதத்தில் இந்நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட போது முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டது.
ஆனால் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்த போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
2020 துவக்கமும் கொரோனா பாதிப்பும்
2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் சீனா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் துவக்க நிலையில் இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் 1,500 ரூபாயில் இருந்து 1,400 ரூபாய் வரையிலான விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 57 பில்லியன் டாலரில் இருந்து 52 பில்லியன் டாலர் வரையில் சரிந்தது.
முகேஷ் அம்பானி குடும்பம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 42 சதவீத பங்குகள் முகேஷ் அம்பானி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் இவரது மொத்த சொத்து மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பை அதிகளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் வாயிலாக இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஏற்ற இறக்கும் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பை அதிகளவில் பாதிக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 32.47 பங்குகளைப் பேஸ்புக், கூகுள், குவால்கம், இன்டெல் என உலகின் முன்னணி டெக் நிறுவனங்களுக்கும், பல்வேறு முன்னணி பங்கு முதலீட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து சுமார் 1,52,056 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டி மாபெரும் வெற்றியைக் கண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை விற்பனை செய்து பெரிய வெற்றியை அடைந்த பின்பு முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 10.09 சதவீத பங்கு விற்பனை செய்து சுமார் 47,265 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி அசத்தினார்.
வர்த்தக விரிவாக்கம்
இதோடு ஜியோமார்ட் அறிமுகம், வர்த்தக விரிவாக்கம், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு, புதிய வர்த்தகத் துறைக்குள் நுழைய வேண்டும் என அர்பன் லேடர், நெட்மெட்ஸ் போன்ற நிறுவன கைப்பற்றல் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை அடைந்தது.
வரலாற்று உச்ச விலை
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியதன் வாயிலாக ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு வரலாறு காணாத உச்ச அளவான 2,369.35 ரூபாய் அளவீட்டை அடைந்தது.
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 88.4 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
முகேஷ் அம்பானி சரிவு
இதன் பின் பியூச்சர் குரூப் உடனான ரிலையன்ஸ் ரீடைல்-ன் 24,713 கோடி ரூபாய் வர்த்தகப் பரிமாற்ற ஒப்பந்தம் அமேசான் மூலம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதன் வாயிலாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்பட்ட வர்த்தகம், வருவாய் பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் பங்கு மதிப்பு படிப்படியாகச் சரியத் துவங்கியது.
இதன் வாயிலாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்புத் தற்போது 74 பில்லியன் டாலராகச் சரிவடைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications