இந்த வெளு வெளுக்குதே கொரோனா! முகேஷ் அம்பானிக்கு கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத முரட்டு அடி!

கொரோனா வைரஸால் நம்மைப் போன்ற மாத சம்பளம ஏழைகள், தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை போய்விடுமோ..? என பயந்து கொண்டு இருப்பார்கள்.

ஏழை மக்களோ எப்போது லாக் டவுன் முடிந்து, வேலை கிடைத்து, கூலி கைக்கு வரும், நிம்மதியாக வாழலாம் என கவலைப்படுவார்கள்.

முகேஷ் அம்பானி போன்ற இந்தியாவின் பிசினஸ் ராஜாவுக்கு எல்லாம் இந்த கொரோனாவால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா..? என்ன என்று கேட்டால் பொதுவாக இல்லை என்று தான் சொல்வோம். ஆனால் முகேஷ் அம்பானியைக் கூட இந்த கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. முரட்டு அடி கொடுத்து இருக்கிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இப்போது வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் மிகப் பெரிய வருவாய், கச்சா எண்ணெய் தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கூட ரிலையன்ஸ் தான் வைத்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிரச்சனை

பிரச்சனை

சரி கச்சா எண்ணெய்யில் இருந்து தான் ரிலையன்ஸுக்கு கணிசமாக வருமானம் வருகிறது அதற்கு என்ன இப்போது என்கிறீர்களா? கச்சா எண்ணெய் விலை தான் பிரச்சனை. உலக அளவில் கொரோனா லாக் டவுனால் கச்சா எண்ணெய்க்கான தேவை தாறுமாறாக குறைந்து இருக்கிறது.

விலை சரிவு

விலை சரிவு

அதோடு, கடந்த ஜனவரி 2020-ல் இருந்தே கச்சா எண்ணெய் விலை சர சரவென சரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 2020-ல் சுமாராக 65 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் விலை, இன்று சுமாராக 25 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

முதல் முறை

முதல் முறை

கச்சா எண்ணெய் விலை சரிவு + எரிபொருள் தேவை சரிவால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்ச் 2020 காலாண்டு நிகர லாபம் 73 % சரிந்து இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் காலாண்டு நிகர லாபம் சரிவது இதுவே முதல் முறை என்கிறது ராய்ட்டர்ஸ் நிறுவன செய்திகள். ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு நேர் மாறாக ரிலையன்ஸ் ஜியோ நல்ல லாபம் பார்த்து இருக்கிறது.

13 ஆண்டுகளில் இல்லாத சரிவு

13 ஆண்டுகளில் இல்லாத சரிவு

இந்த கொரோனா வைரஸ், முகேஷ் அம்பானி போன்ற வியாபார ராஜாவை வெளுத்து எடுத்து இருக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு உதாரணமாக, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் 2019-ல் 9,585 கோடி ரூபாயில் இருந்து மார்ச் 2020 காலாண்டில் 2,580கோடி ரூபாயாக 73 % சரிந்து இருப்பதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு

மற்றவர்களுக்கு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பெரிய ஆட்களுக்கே 73 சதவிகித நிகர லாபம் அடி வாங்குகிறது என்றால் மற்ற சாமானிய கம்பெனிகளுக்கு அடி எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இன்னும் இந்த கொரோனா வைரஸ் என்ன மாதிரியான குடைச்சல்களை எல்லாம் கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+