முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மார்ச் 2024 ம் ஆண்டுடன் முடிந்த காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்ட நிலையில், இக்காலகட்டத்தில் ரிலையன்ஸ்-ன் ஒருங்கிணைந்த லாபம் 2% குறைந்து ரூ.18,951 கோடியாக இருப்பதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே மார்ச் காலாண்டில் இது ரூ.19,299 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் லாபம் குறைந்திருந்தாலும், வருவாய் 11% அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2.16 லட்சம் கோடியாக இருந்த செயல்பாட்டு வருவாய், இந்த ஆண்டு 11% அதிகரித்து ரூ.2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் வலுவான செயல்பாட்டை முதலீட்டாளர்களுக்குக் காட்டுகிறது.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் குறைந்திருந்தாலும், சில செயல்பாடுகள் நிறுவனத்திற்குச் சாதகமாகவே இருந்துள்ளன. EBITDA அளவு 14% அதிகரித்து ரூ.47,150 கோடியாக உயர்ந்துள்ளது, லாப விகிதமும் 0.5 சதவிகிதம் அதிகரித்து 17.8% ஆக உள்ளது.
ஆயில் மற்றும் கெமிக்கல் பிரிவு மற்றும் நுகர்வோர் வர்த்தகம் இரண்டு இலக்கு வளர்ச்சியைத் தொட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முதன்மையான ஆயில் மற்றும் கெமிக்கல் பிரிவு (O2C) கடந்த காலாண்டில் சிறப்பாக மீண்டு வந்துள்ளது. இத்துறையின் வருவாய் 11% அதிகரித்து ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து எரிபொருள்களின் விற்பனை அதிகரிப்பு மற்றும் உயர்ந்த விலை நிர்ணயமே இதற்குக் காரணம். உள்நாட்டு பாலிமர் மற்றும் பாலியஸ்டர் தேவை கடந்த ஆண்டு அளவீட்டைத் தான் தொட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது பேசுகையில், இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வணிகங்களில் செய்யப்பட்ட சில முக்கிய முயற்சிகள் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளன. இந்த ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனம் வரிக்கு முந்தைய லாபத்தில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறியது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications