இந்திய பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில், நிகரலாபம் 108% அதிகரித்து, 13,277 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 6,348 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே முந்தைய காலாண்டில் லாபம் 13,101 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் எவ்வளவு?
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 1.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 1.39 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதே டிசம்பர் காலாண்டில் 1.23 லட்சம் கோடி ரூபாயாகவும் வருவாயினை கண்டிருந்தது.
டிவிடெண்ட் அறிவிப்பு
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒரு பங்கிற்கு 7 ரூபாய் டிவிடெண்ட் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆயில் முதல் தொலைத் தொடர்பு வரையில் வணிகம் செய்யும் இந்த நிறுவனத்தின் வணிகத்தில், தற்போது குறிப்பாக டிஜிட்டல் வணிகத்தினை இந்த நிறுவனம் மேம்படுத்த தொடங்கியுள்ளது.
வணிகம் எப்படி?
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் சில்லறை வர்த்தகம் மற்றும் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் நல்ல வளர்ச்சியினைக் கண்டுள்ளன. அதோடு ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு வணிகமாக ரிலையன்ஸ் ஜியோவின் வணிகமானது, வீட்டில் இருந்து பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம்
இது குறித்து முகேஷ் அம்பானி , இந்த நெருக்கடியான நேரத்திலும் நாங்கள் 75,000 வேலைகளை சேர்த்துள்ளோம். அதோடு ஊழியர்களின் நலன் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலனையும் உறுதி செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் உதவிகள் மக்களை விரைவில் மீட்டுக் கொண்டு வர உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
துறை வாரியாக வருவாய்
அதெல்லாம் சரி, துறை வாரியாக எவ்வளவு வருவாய்? ரிலையன்ஸின் எண்ணெய் - கெமிக்கல்ஸ் வணிகத்தின் வருவாய் 4.4% அதிகரித்து, 1.01 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 96,732 கோடி ரூபாயாக இருந்தது. இதே டிஜிட்டல் சேவைகளின் வருவாய் 22,628 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 19,153 கோடி ரூபாயாக இருந்தது.
ஜியோவின் லாபம்
இதே சில்லறை வர்த்தக பிரிவில் இதன் வருவாய் 41,926 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஜியோவின் நிகரலாபம் 3,508 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2,379 கோடி ரூபாயாகவும் இருந்தது. இது 47% அதிகரித்துள்ளது. இதே இதன் வருவாய் 18,278 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் பங்கு விலை
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது NSE-யில் 1.46 சதவீதம் குறைந்து, 1994.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே BSE- யில் 1.42% குறைந்து, 1994.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ரிலையன்ஸ் காலாண்டு முடிவுகள் இன்று பங்கு சந்தைக்கு முடிவுக்கு பின்னர் வெளியிடப்பட்ட நிலையில், இதன் பங்கு விலையானது திங்கட்கிழமையன்று வர்த்தகத்தில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications