இந்தியாவில் அதிக மதிப்புடைய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம், ரீடைல், டிஜிட்டல் சேவைகள், மீடியா, நியூ எனர்ஜி என மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்த இந்தியா முதல் உலக நாடுகள் வரையில் இருக்கும் நிறுவனங்களை கைப்பற்றி வருகிறது. இதோடு ஐபிஓ வெளியிடவும் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது இந்த நிலையில் 2005 முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் CFO ஆக இருக்கும் அலோக் அகர்வால் இடத்தில் தற்போது ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கையில் இனி நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி இருப்பார் என தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி தனது எதிர்கால வளர்ச்சியை குறிவைத்து இந்த புதிய மாற்றத்தை அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது.
ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மனித வளபிரிவு, நாமினேஷன் மற்றும் ரெமுனரேஷன் கமிட்டி கொடுத்த பரிந்துரைகள் படி போர்ட் ஆப் டைரக்டர்ஸ் மார்ச் 24 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டு முதல் Joint Chief Financial Officer ஆக இருக்கும் ஸ்ரீகாந்த் ஜூன் 1 முதல் Chief Financial Officer பணியை தொடர்வார் என தனது அறிக்கையில் பங்குச்சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் தெரிவித்துள்ளது.
அலோக் அகர்வால்
இதன் மூலம் தற்போது தலைமை நிதியியல் அதிகாரியாக இருக்கும் அலோக் அகர்வால்-க்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு மூத்த ஆலோசகராக அலோக் அகர்வால் செயல்படுவார்.
30 வருடம்
ஜூன் 1 முதல் அலோக் அகர்வால் மூத்த ஆலோசகராக பல முக்கியமான வர்த்தக முடிவுகளை எடுக்க உதவ உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அலோக் அகர்வால் சுமார் 30 வருடம் பணியாற்றியுள்ளார்.
பாராட்டு
ஸ்ரீ அலோக் அகர்வால் ஒரு திறமையான நிதி நிபுணர் ஆவார். அவர் 2005 ஆம் ஆண்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பயணத்தில் அவரது பங்களிப்பை நிர்வாகம் பாராட்டுகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications