சிங்கப்பூர் : முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சிங்கப்பூரில் ஆர்இசி சஸ்டெயினபில் எனர்ஜி சொல்யூஷன் (REC Sustainable Energy Solutions ) என்ற பெயரில் ஒரு துணை நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது.
சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த துணை நிறுவனமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க மற்றும் நீடித்த நிலை தன்மை கொண்ட எரிசக்தி பிரிவுகளில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் செயல்படக்கூடிய இந்த பன்னாட்டு திறன் மையத்தில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற பலர் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த செயல்பாடுகளுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள் தொழில்நுட்ப ரீதியாக நடைபெறும் என்றும் பிற கொள்முதல் சேவைகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த நிறுவனத்தில் 1 லட்சம் டாலர்களை முதலீடு செய்திருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நவீன சோலார் தொழில்நுட்ப ஆய்வகத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் விரிவாக்கம் செய்திருக்கிறது. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல், இயற்கை எரிவாயு, சில்லறை வணிகம், பொழுதுபோக்கு மற்றும் ஆடை என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்திய பங்குச் சந்தையில் அதிக சந்தை மூலதன மதிப்பு மற்றும் வருமானம் கொண்ட நிறுவனமாக இயங்கி வருகிறது. சர்வதேச அளவில் 100ஆவது அதிக சந்தை மூலதன மற்றும் வருமானம் கொண்ட நிறுவனமாக இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1958 ஆம் ஆண்டு திருபாய் அம்பானி அவர்களால் நிறுவப்பட்டு தற்போது அவருடைய மகன் முகேஷ் அம்பானியால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டி இருந்தது. இந்த நிறுவனத்தின் கீழ் ஜியோ பிளாட்பார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடைல், ஜியோ பைனான்சியல் சர்வீஸ், நெட்வொர்க் 18, அலோக் இண்டஸ்ட்ரீஸ் , ரினிவபில் எனர்ஜி கார்ப்பரேஷன் என்பன உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பிப்ரவரி 14ஆம் தேதி அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1217 ரூபாயாக வர்த்தகமானது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications