நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான காலத்திலும் கூட சாதனை படைத்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
எந்த தொழிலை தேர்தெடுத்தாலும், அதில் மற்றவர்களை ஒரங்கட்டி, கொடிகட்டி பறப்பது தான் முகேஷ் அம்பானியின் வழக்கம். இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்றாலே முதலீட்டாளர்களுக்கு தனிப்பிரியம் தான்.
அதுவும் கடந்த வாரத்தில் ஒட்டுமொத்த பங்கு சந்தையும் இருந்த நிலையில் கூட, ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் டாப் கியரில். எகிறியுள்ளது இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம்.
கடந்த வார நிலவரம்
இந்த நிலையில் கடந்த வாரத்தில் சிறந்த 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 1,15,758.53 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் முதலிடம் வகிப்பது வழக்கம் போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான். கடந்த வியாழக்கிழமையன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் முதல் முறையாக 50,000 புள்ளிகளை தொட்ட நிலையில், இந்தளவுக்கு நிறுவனங்களின் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது.
Array
இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், உள்ளிட்டவற்றின் சந்தை மூலதனங்கள் சரிவினைக் கண்டுள்ளன.
டாப் லெவலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதே கடந்த வாரத்தில் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் குறியீடானது 156.13 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் டாப் 10 நிறுவனங்களில் அதிக சந்தை மூலதனத்தினை சேர்த்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 71,033.44 கோடி ரூபாய் அதிகரித்து 12,99,363.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் இரண்டாவது இடம்
இதே ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 4,690.48 கோடி ரூபாய் அதிகரித்து, 8,61,153.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 13,357.22 கோடி ரூபாய் அதிகரித்து, 5,65,949.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே பஜாஜ் பைனான்ஸின் சந்தை மூலதனம் 5,176.23 கோடி ரூபாய் அதிகரித்து, 2,99,332.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் சரிவு
இதுவே பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலனம் 13,993.5 கோடி ரூபாய் குறைந்து, 3,14,703.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது 12,502.38 கோடி ரூபாய் குறைந்து, 7,95,112.89 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஹெச்டிஎஃப்சியின் சந்தை மதிப்பானது 7,677.82 கோடி ரூபாய் குறைந்து, 4,66,123.79 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
சந்தை மூலதனங்கள் சரிவு
இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மூலதனம் 6,416.75 கோடி ரூபாய் குறைந்து, 3,62,665.26 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 6,370.02 கோடி ரூபாய் குறைந்து, 3,68,375.92 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1,980.71 கோடி ரூபாய் சந்தை மதிப்பானது குறைந்து, 5,70,976.45 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications