சறுக்கியது ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி சோகம்..!!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), செப்டம்பர் காலாண்டில் தனது நிகர லாபத்தில் 5% சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.17,394 கோடி பதிவு செய்திருந்த நிலையில், இம்முறை ரூ.16,563 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் 0.2% அதிகரித்து ரூ.2.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இக்காலாண்டில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்தது டெலிகாம் பிரிவான ஜியோ தான்.

சறுக்கியது ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி சோகம்..!!

எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு வரையில் பல துறையில் இயங்கு்ம ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இரண்டாம் காலாண்டில் EBITDA வருவாய் வருடாந்திர அடிப்படையில் 2 சதவீதம் குறைந்து ரூ.43,934 கோடி பதிவு செய்துள்ளது. மேலும் EBITDA மார்ஜின் அளவு 50 அடிப்படை புள்ளிகள் குறைந்து 17% ஆக குறைந்துள்ளது.

இக்காலாண்டில் அதிகப்படியான கடன் சுமை காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதிச் செலவுகள் 5% அதிகரித்து ரூ.6,017 கோடியாக (718 மில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவின் இரண்டாம் காலாண்டு வருவாய், வருடாந்திர அடிப்படையில் 6% குறைந்துள்ளது.

KG D6 தளத்தில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவிற்கான சராசரி விலை இக்காலாண்டில் mmBTUக்கு $9.55 ஆக இருந்தது. CBM வாயுவிற்கான சராசரி விலை MMBtuக்கு $11.4 ஆக இருந்தது. இந்த காலாண்டில் அப்ஸ்ட்ரிம் பிரிவுக்கான EBITDA ரூ.5,290 கோடியாக 11% உயர்ந்துள்ளது. அதேசமயம், விளிம்புகள் 85% ஆக இருந்தன.

ரிலையன்ஸ் ஜியோ: ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபத்தில் 23.4% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.5,299 கோடி பதிவு செய்திருந்த நிலையில், இக்காலாண்டில் ரூ.6,539 கோடி லாபம் பதவி செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்ரேஷன்ஸ் மூலம் கிடைக்கும் வருவாய் 18% அதிகரித்து ரூ.31,709 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.26,875 கோடி அளவிலான வருவாய் மட்டுமே பதிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்: செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிகர லாபம் 1.3% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,800 கோடி பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ரூ.2,836 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. மேலும் இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து வருவாய் 3.5% குறைந்து ரூ.66,502 கோடியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+