முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 9.3 சதவீதம் உயர்ந்து 17,265 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் இக்காலாண்டில் வருவாய் அளவு 3.6 சதவீதம் அதிகரித்து 2.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, சந்தை கணிப்பை ஒப்பிடுகையில் லாபத்தில் கூடுதல் வருமானத்தைப் பெற்று இருந்தாலும், வருவாயில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கோட்டை விட்டு உள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் EBITDA அளவு 40,656 கோடி ரூபாயாக உள்ளது, மேலும் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு இக்காலாண்டில் 18.1 சதவீதமாக உயர்ந்திருக்கும் வேளையில் வருடாந்திர அடிப்படையில் இது 2.10 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 0.50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் மொத்த பணம் இருப்பு 1.92 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது செப்டம்பர் காலாண்டில் 1.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் என்பதால் இதில் ரீடைல், ஜியோ, எண்ணெய் வர்த்தகம் ஆகிய அனைத்தும் அடங்கும். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ முடிவுகள் தனித்தனியாக வெளியிடப்பட்டு உள்ளது.
இதனால் O2C எனப்படும் ஆயில் டூ கெமிக்கல் பிரிவின் வர்த்தகத்தை மட்டும் இப்போது பார்ப்போம். ஒருகாலத்தில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் O2C பிரிவு வர்த்தகம் தான் பெரிய அளவிலான லாபத்தையும், வருவாயும் அளித்து வந்த நிலையில் தற்போது இதன் மீதான முக்கியத்துவம் குறைந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் மொத்த ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் மந்தமாகச் செயல்பட்டது O2C பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரிவின் வருவாய் 2.4 சதவீதம் குறைந்து 1.41 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல் ஆப்ரேட்டிங் லாபம் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்து 14,064 கோடி ரூபாயாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.36 லட்சம் கோடி ரூபாய் மொத்த வருவாயில் O2C பிரிவின் வருவாய் பங்கீடு மட்டுமே 62 சதவீதம்.
டிசம்பர் காலாண்டின் மொத்த எண்ணெய் வர்த்தகம் 18.7 மில்லியன் டன், செப்டம்பர் காலாண்டில் 20 மில்லியன் டன், கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் 18.8 மில்லியன் டன்னாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications