முகேஷ் அம்பானியின் தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
வரிக்கு பிந்தைய ஒருங்கினைந்த லாபம் 46.3% அதிகரித்து, 17,955 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது அதன் தொலைத் தொடர்பு துறை, டெலிகாம், சில்லறை வணிகம் உள்ளிட்டவற்றில் வலுவான செயல்பாட்டின் காரணமாக நல்ல லாபம் கண்டுள்ளது.
வருவாய்
இதன் நிகர லாபம் கடந்த ஆண்டில் 12,273 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதன் மார்ச் காலாண்டு லாபமானது 16,203 கோடி ரூபாயாகவும் இருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதம் 2,23,113 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது கடந்த ஆண்டினை காட்டிலும் 54.5% அதிகரித்துள்ளது.
எபிட்டா விகிதம்
இதன் எபிட்டா விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 45.8% அதிகரித்து. 40,179 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பங்கின் ஏற்றம் ஒரு பங்குக்கு 40% அதிகரித்து, 26.5 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஆயில் டூ கெமிக்கல் வணிகத்தில் நல்ல வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் & ஜியோ
குறிப்பாக ரிலையன்ஸின் முக்கிய வணிகமாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடெயில் வணிகமானது 51.9% அதிகரித்து, 58,554 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே ரிலையன்ஸ் ஜியோவின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 23.8% அதிகரித்து, 4335 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் நிகரலாபம் கடந்த ஆண்டில் 3501 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வருவாய் 21.5% அதிகரித்து, 21,873 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 17,994 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அர்பு
ஜியோவின் அர்பு விகிதம் ஒரு வாடிக்கையாளருக்கு 175.7 ரூபாயாகவும் உள்ளது.இது கடந்த ஆண்டினை காட்டிலும் 27% அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 4.8% அதிகரித்துள்ளது.
சவால்கள்
இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கம் எழுந்துள்ளது. இது வர்த்தகத்தினை சீர்குலைத்துள்ளது. இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதிக கச்சா எண்ணெய் விலை, சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சரக்கு செலவு அதிகரிப்பு என பல சவால்கள் இருந்தாலும், அதன் செலவுகள் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications