இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவின் முன்னணி பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸில் தனது 4.9% பங்குகளை ரூ.7,704 கோடி மதிப்பில் விற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது.
பல முறை முயற்சி செய்து விற்க முடியாமல் போன நிலையில் இந்த முயற்சியில் ரிலைன்யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விற்பனை செய்து சாதித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஏசியன்ஸ் பெயின்ட்ஸ் முதலீட்டுக்கு பின் 17 வருட கதை உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த விற்பனையில் சுமார் 35 மில்லியன் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.2,201 விலையில் விற்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 0.73 சதவீதம் உயர்ந்து 2225 ரூபாய்க்கு முடிந்தது.
2008 ஜனவரி மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது முதலீட்டு நிறுவனமான ஓஜஸ்வி டிரேடிங் மூலம் ஏசியன் பெயிண்ட்ஸின் 4.9% பங்குகளை ரூ.500 கோடிக்கு வாங்கியது. கடந்த 17 ஆண்டுகளில், ஏசியன் பெயிண்ட்ஸ் இந்திய பெயிண்ட் சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு, பங்கு விலைகளும் உயர்ந்தன. இந்த காலகட்டத்தில், ரிலையன்ஸ் இந்த பங்குகளை விற்காமல் தக்கவைத்து வைத்திருந்தது. வெறும் 500 கோடி முதலீடு இன்று ரூ.7,704 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது, இந்தியாவின் ரூ.900 கோடி மதிப்பிலான பெயிண்ட் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் ஏசியன் பெயின்ட்ஸ் சந்தை மதிப்பு 2.13 லட்சம் கோடி ரூபாயாக உள்லது. இருப்பினும், புதிய நிறுவனங்களின் வருகை, இதன் சந்தைப் பங்கை 2024-25 நிதியாண்டில் 59%லிருந்து 52%ஆக குறைத்துள்ளது. இது கடந்த 20 வருடத்தில் கவனிக்கப்பட வேண்டிய சரிவாக பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஏசியன் பெயிண்ட்ஸின் பங்கு விலை 25%க்கு மேல் சரிந்துள்ளது, நடப்பு ஆண்டில் 3.46 சதவீதம் சரிந்துள்ளது இது சந்தை போட்டியின் தாக்கத்தை வெளிச்சம்போட்டு காட்டிகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளை விற்க முயற்சித்தார், ஆனால் அது வெற்றி பெறவில்லை. தற்போது, சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் புதிய போட்டியாளர்களின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் தனது 17 ஆண்டு முதலீட்டை பணமாக்க முடிவு செய்தார்.


Click it and Unblock the Notifications