ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட நிலையில் காலை வர்த்தகத்தில் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. இந்தியாவின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் எதிரொலியாக வெள்ளிக்கிழமை தொடர்ந்து திங்கட்கிழமையும் வர்த்தகம் சரிய துவங்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 2484 ரூபாய்க்கு முடிந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் 2469.55 ரூபாய் அளவில் வர்த்தகம் முடிந்துள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் 2 சதவீதம் சரிந்தாலும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, இந்த தடுமாற்றத்தில் 11 மணி வரையிலான வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 2,514 ரூபாய் வரையில் உயர்ந்தது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளை தனியாக பிரித்த பின்பு 2580 ரூபாய் விலைக்கு மதிப்பிடப்பட்ட நிலையில் இன்றைய அதிகப்படியான விலையும் பெரும் பின்னடைவில் தான் உள்ளது. இது ரிலையன்ஸ் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் இன்போசிஸ் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று 0.64 சதவீத உயர்வுடன் 1338.90 ரூபாய் விலைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் பங்குகள் 1330.40 ரூபாய்க்கு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த லாபம் கடந்த வருடத்தை காட்டிலும் 11 சதவீதம் சரிந்து 16,011 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல் மொத்த வருவாய் 5.3 சதவீதம் வரையில் சரிந்து 2.11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளது, இதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் ரீடைல் பிரிவின் வருவாய் 69,948 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மொத்த லாபம் 19 சதவீதம் அதிகரித்து 2,448 கோடி ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இக்காலாண்டில் வருடாந்திர அளவில் சுமார் 12% உயர்வில் 4863 கோடி ரூபாயை மொத்த லாபமாக பெற்றுள்ளது. மேலும் இக்காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ஆப்ரேட்டிங் வருவாய் கிட்டத்தட்ட 10% அதிகரித்து 24,042 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த மோசமான நிலையை சமாளிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு சுமார் 9 ரூபாய் ஈவுத்தொகையை கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் தாக்கம் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் மூலம் இன்று எதிரொலிக்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications