இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. வியாழக்கிழமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்டது.
இதற்காக நடந்த சிறப்பு ஒரு மணிநேர வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2580 ரூபாய் விலையில் முடிந்த நிலையில், நேற்றைய என்எஸ்ஈ சந்தையில் 2841.85 ரூபாய்க்கு முடிந்த நிலையில், இவ்விரண்டையும் கழித்த பின்பு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்டது மூலம் அனைத்து ரிலையன்ஸ் பங்கு முதலீட்டளார்களுக்கு 1:1 கணக்கில் பங்குகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ள நிலையில், இனி மொத்தமும் ஏற்றுமுகம் தான் என நினைக்கும் போது ரிலையன்ஸ் பங்குகள் இன்று சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 3 சதவீதம் சரிந்துள்ளது, இதன் மூலம் ஒரு பங்கு விலை 2523.35 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.86 சதவீதம் சரிந்து 2554.60 ரூபாயாக உள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்னதாகவே சரிந்துள்ளது. இக்காலாண்டில் ரிலையன்ஸ் லாபத்தில் இரண்டு இலக்கு சரிவையும், விற்பனையில் 1 சதவீத சரிவையும் எட்டு என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் O2C பிரிவில் ஏற்பட்டு உள்ள மோசமான வர்த்தக சரிவுகள் தான்.


Click it and Unblock the Notifications