ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று கிட்டதட்ட 4% வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்றைய முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 3.72% வீழ்ச்சி கண்டு, 1899.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது கவனிக்கதக்கது. இதே மாதத்தில் இந்த பங்கின் விலையானது 8 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.

அதெல்லாம் சரி? ஏன் இந்த சரிவினைக் கண்டுள்ளது? என்ன காரணம்? இந்த நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தில் தொடர்ந்து முதலீடுகள் வந்த வண்ணமே உள்ளன. ஜியோவிலும் முதலீடுகள் அதிகரித்துள்ளது. அப்படி இருந்தும் ஏன் இந்த சரிவு? வாருங்கள் பார்க்கலாம்.
அக்டோபர் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 15 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 9,567 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 1.1 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.
இந்த நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் வருவாய் 17.7 சதவீதம் அதிகரித்து, 29,665 கோடி ரூபாயாக அதிரித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் வலுவான செயல்பாடு காரணமாக EBIT 44.3 சதவீதம அதிகரித்து, 4,895 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,392 கோடி ரூபாயாக இருந்தது.
இதே டெலிகாம் துறையை சேர்த்த ஜியோ நிறுவனத்தின் லாபம் 12.9 சதவீதம் அதிகரித்து 2,844 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,520 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் கொரோனா காரணமாக வர்த்தகம் 4.9 சதவீதம் சரிந்து 39,199 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எனினும் இந்த நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தினை மேம்படுத்த அதன், 10.09 சதவீதம் பங்குகளை விற்பனை செய்துள்ளதன் மூலம் 47,265 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
ஏனெனில் ஜியோவின் அர்பு விகிதம், ஜியோ மார்ட்டிலும் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதன் லாபம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உண்மையில் இது வரும் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.


Click it and Unblock the Notifications