முகேஷ் அம்பானி-யின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை, உச்சத்தில் இருந்து 17% மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆல் டைம் உச்சமானது ஏப்ரல் 29, 2022ல் 2855 ரூபாயினை தொட்டது. இன்று 2360 ரூபாயாக உள்ளது. இந்த காலகட்டத்தில் 495 ரூபாய் அல்லது 17.33% சரிவினைக் கண்டுள்ளது.
டெக்னிக்கலாக இப்பங்கின் விலையானது எப்படியுள்ளது? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
டெக்னிக்கலாக எப்படியிருக்கு?
இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவ்ரேஜ்ஜூக்கும் கீழாகவே இருந்து வருகின்றது.
கடந்த ஒரு ஆண்டில் இப்பங்கின் விலையானது 12.4% ஒரு பங்கு விலையானது, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 0.13% சரிவினைக் கண்டுள்ளது. இன்று மட்டும் பி எஸ் இ-யில் 0.78 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன, இதன் மதிப்பு 18.36 கோடி ரூபாயாக உள்ளது.
52 வார உச்ச & குறைந்தபட்ச விலை
இதன் சந்தை மதிப்பானது 16.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை ஏப்ரல் 29, 2022ல் 2855 ரூபாயை தொட்டது. இதே 52 வார குறைந்தபட்ச விலையானது மார்ச் 8, 2022ல் 2181 ரூபாயை தொட்டது.
இண்ட்ராடேவில் இப்பங்கின் விலையானது 1.18% சரிவினைக் கண்டு, 2343 ரூபாயை தொட்டது. இதே 11.29 மணி நிலவரப்படி 0.25% சரிவினைக் கண்டு, 2365.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
வாங்கலாமா?
டிப்ஸ்2 டிரேடர்ஸ் இப்பங்கினை 2320 - 2350 ரூபாய் என்ற லெவில் வாங்கலாம். இது 2430 என்ற லெவலை முடிவில் உடைத்து மேலாக சென்றால், 2640 - 2800 ரூபாய் என்ற லெவலுக்கு செல்லலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மார்கன் ஸ்டான்லி இப்பங்கினை 3085 என்ற இலக்கினையும் கொண்டுள்ளது. இது தொடர்ந்து முதலீடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தொழில் வளர்ச்சியும் மேம்பட்டு வருகின்றது. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெஃபரீஸ் கணிப்பு
சமீபத்தில் ஜெஃபரீஸ் தரகு நிறுவனம் ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்தது. இதன் இலக்கு விலையானது 3080 ரூபாயாகவும் நிர்ணயம் செய்தது. .
ரிலையன்ஸின் ஜியோ, இ-காமர்ஸ் வணிகம், எனர்ஜி வணிகம், புதுபிக்கத்தக்க ஆற்றல் துறையில் முதலீடு என பலவும் நிறுவனத்தினை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும்.
இலக்கை எட்டியது?
குறிப்பாக ஜியோவின் கட்டணம் அதிகரிக்கலாம். ஜியோ பங்கு சந்தையில் நுழையலாம். ஜியோமார்ட்டின் வளர்ச்சியும் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் ஜெஃபரீஸ் ரிலையன்ஸ் இலக்கு விலையினை கீழாக 2350 ரூபாய் வரையில் செல்லலாம் என கணித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த விலையினையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications