தனித்தனியாக இருக்கும்போதே உலகினை ஆட்டிப்படைத்து வரும் இரு ஜாம்பவான்கள், தற்போது இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறாதோ தெரியவில்லை. ஆனால் தான் எதனை செய்தாலும், அதிலும் மக்களுக்கு சாதகமாக, அதிரடியான பல சலுகைகளை வாரி வழங்குவது முகேஷ் அம்பானியின் பாலிசி.
இதே இன்றைய இளைஞர்களில் பேஸ்புக், வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் இல்லாதவர் யாரும் உண்டோ. இப்படி உலகினை தன் உள்ளங்கைக்குள் அடக்கி ஆண்டு வரும் ஒரு நபர் தான் மார்க் ஜூக்கர்பெர்க். இப்போது இந்த இரு தலைகளின் கூட்டணி, இன்னும் எதையெல்லாம் சாதிக்க உள்ளதோ தெரியவில்லை.
ஏற்றம் காணும்
இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ திகழ்ந்து வருகிறது. இதே இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது பேஸ்புக். இப்படி இருபெரும் ஜாம்பவான்களும் கை கோர்த்துள்ள நிலையில் ரிலையன்ஸின் மதிப்பும் நிச்சயம் இன்னும் ஏற்றம் காணும் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மனதில் எழுந்துள்ளது.
ரிலையன்ஸ் பங்கு விலை ஏற்றம்
இதன் விளைவு இன்று பங்கு சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 10% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இவ்வளவு முதலீடா?
மேலும் இதற்காக முதல் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதகாவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாய் முதலீடு செயய உள்ளதாகவும், இதன் மூலம் ஜியோ நிறுவன மதிப்பு 4.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜியோமார்ட் கூட்டணி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோமார்ட் என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தை களம் இறக்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்ததன் மூலம் ஆன்லைன் வர்த்தகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் மக்களை இணைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே 250 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் மேலும் கால் பதிக்க முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் பங்கு விலை
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்திமன் பங்கு விலையானது கிட்டதட்ட 10% அதிகரித்துள்ளது, குறிப்பாக இன்று மட்டும் 121 ருபாய் அதிகரித்து 1357.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications