இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் 52 வார சரிவை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 1 மாதமாக பல புதிய முதலீடுகளையும், வர்த்தக விரிவாக்கத்தையும் அறிவித்து வரும் வேளையில் நேற்று ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக 30 சதவீத குறைவான விலையில் போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிவித்து டெலிகாம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 52 வார சரிவை பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் தொடர்ந்து 6 நாட்களாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் போது 2,243 ரூபாய் விலையில் துவங்கிய நிலையில், 52 வார குறைவான விலையான 2,202.20 ரூபாய் அளவீட்டை எட்டியது. ரிலையன்ஸ் பங்குகள் மார்ச் 10 ஆம் தேதி முதல் 4.44 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 0.48 சதவீதம் சரிந்து 2,226.05 ரூபாயாக உள்ளது.
30 நாட்கள் சரிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த 30 நாட்களில் 8.76 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதேபோல் 2023 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து தொடர் சரிவு மூலம் சுமார் 13.56 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் தனது சந்தை மதிப்பீட்டு அளவில் பென்ச்மார்க் அளவான 15 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் குறைந்து 14.65 லட்சம் கோடி ருபாயாக சரிந்துள்ளது.
முதலீட்டாளர்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவுக்கு சர்வதேச முதலீட்டு சந்தையில் உருவாகியுள்ள எதிரொலிகளும் காரணமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் கேப்பிடல் எக்ஸ்பின்டிச்சர் சைக்கிள் முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது.
வெளிப்படை தன்மை
ரிலையன்ஸ் முதலீட்டின் முடிவுகள் வெளிப்படையாக இல்லை எனவும், எவ்வளவு முதலீடு புதிய வர்த்தகம் மீது திரும்புகிறது ஆகியவற்றின் தரவுகள் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளது.
1 லட்சம் கோடி ரூபாய்
இது மட்டுமா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, டெபிட் ப்ரீ நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் மத்திப்பிலான கடன்களை கொண்டு உள்ளது.
கடன் மூலம் பிரச்சனை
அதிக கடன் மற்றும் தொடர் வட்டி விகிதம் ஆகியவற்றின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் வருமானத்தில் பெரும் பகுதி வட்டிக்காக மட்டுமே செலவிடப்படும் என்பதும் ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவுகள்
டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் லாபம் 15 சதவீதம் வரையில் சரிந்து 15,792 கோடி ரூபாயாக உள்ளது, இதேகாலக்கட்டத்தில் ரிலையன்ஸ் வருவாய் 15.3 சதவீதம் அதிகரித்து 2.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
முதலீடு
இந்த நிலையில் புதிய முதலீட்டாளர்கள் விலை சரிவை பயன்படுத்தி முதலீடு செய்து நீண்ட கால அடிப்படையில் லாபம் பெற முடியும், ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் இந்த கரெக்ஷனை சரி செய்ய புதிய முதலீடுகள் செய்யலாம். இதன் மூலம் மீடியம் டேர்ம்-ல் லாபம் பெற வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications