மும்பை: பில்லியனர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த ஐஎம்ஜி சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 50% பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த ஐஎம்ஜி சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 50% பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 52.08 கோடி ரூபாய் நிதி முதலீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் கையகப்படுத்தலா?
சிங்கப்பூரை சேர்ந்த ஐஎம்ஜி சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், துணை நிறுவனம் தான் ஐஎம்ஜி (IMG ). இந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 50% பங்கு ஏற்கனவே உள்ளது. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 50% பங்குகளை ரிலையன்ஸ் கையகப்படுத்தினால், இந்த ஐஎம்ஜி நிறுவனம் முழுவதும் ரிலையன்ஸுக்கு சொந்தமாக இருக்கும்
ரிலையன்ஸுடன் கூட்டணி
இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு இந்த நிறுவனத்தின் பெயர் மாற்றப்படும் என்றும் ரிலையன்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. IMG நிறுவனம் சர்வதேச அளவில் ஸ்போர்ட்ஸ் மார்கெட்டிங் - மேனேஜ்மென்ட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த 2010ல் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்குகளை மேம்படுத்துவதற்கும், சந்தைபடுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் ரிலையன்ஸுடன் கூட்டணியை உருவாக்கியது.
ஐஎம்ஜி என்ன செய்கிறது?
ஐஎம்ஜி நிறுவனம் சர்வதேச அளவின் விளையாட்டு உடைகள், நிகழ்ச்சிகள் மற்றும் மீடியாவில் உலகளாவிய தலைவராக உள்ளது. இது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது. இது எண்டெவர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். ஐஎம்ஜி -ஆர் இந்தியாவில் விளையாட்டு, பேஷன் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளின் உருவாக்கம், உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளது.
லாபம் எவ்வளவு?
ஐஎம்ஜி -ஆர் இந்த நிறுவனத்தின் வருவாய் 2020 மற்றும் 2019, 2018ல் முறையே 181.70 கோடி ரூபாய், 195.55 கோடி ரூபாய், 158.26 கோடி ரூபாயாகும். இதே இந்த கூட்டு நிறுவனத்தின் நிகரலாபம் முறையே 16.35 கோடி ரூபாய், 19.25 கோடி ரூபாய், 15.82 கோடி ரூபாய் ஆகும்.
ஒப்புதல் தேவையில்லை
ஆக மேற்கூறிய இந்த ஒப்பந்தங்களுக்கு எந்தவொரு அரசாங்க ஒப்புதலும் அல்லது ஒழுங்குமுறை ஒப்புதலும் தேவையில்லை. ஆக இந்த காலண்டர் ஆண்டில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியில் வேறு எந்த புரோமோட்டர்களும் இல்லை என்பதால், வேறு யாரும் போட்டிக்கு வருவார்கள் என்றும் கூற முடியாது.
பங்கு விலை நிலவரம்
குழும் நிறுவனங்களும் இந்த பரிவர்த்தனையில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விரைவில் இந்த கையகப்படுத்தல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 2.58 சதவீதம் அதிகரித்து, 1993.90 ரூபாயாக பிஎஸ்இ-யில் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications