இந்திய நுகர்வோர் சந்தையில் முக்கியப் பங்கு வகித்து வரும் ஜெர்மனி நாட்டின் மெட்ரோ ஏஜி நிறுவனம் மொத்த விலை விற்பனையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து உள்ளது, இந்த நிலையில் வர்த்தகப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் இந்திய வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ரீடைல் மற்றும் நுகர்வோர் விற்பனை சந்தை சிறப்பான வளர்ச்சிப் பாதையில் இருக்கும் வேளையில், டாடா முதல் ரிலையன்ஸ் வரையில் பல முன்னணி வர்த்தகக் குழுமங்கள் இச்சந்தைக்குள் பெரும் பணப் பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.
இந்த வேளையில் லட்டு மாதிரி மெட்ரோ நிறுவனம் இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்வதாக அறிவித்த நிலையில் பல முன்னணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டிப்போட்டது, ஆனால் கடைசியில் வென்றது ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல்
இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல புதிய முயற்சிகளையும், புதிய முதலீடுகளையும் செய்து வருகிறது.
அடுத்தகட்ட வளர்ச்சி
இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் ரீடைல் கடந்த சில மாதமாக FMCG துறையில் பல பொருட்களைச் சொந்தமாகத் தயாரித்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த ரீடைல் மற்றும் FMCG வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
மொத்த விலை விற்பனை
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பல பிராண்டுகள் உடன் நீண்ட கால ஒப்பந்த முறையில் வர்த்தகம் செய்து வருகிறது, இதேபோல் சொந்தமாகத் தயாரித்து வரும் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இதை இந்தியா முழுவதும் குறிப்பாக மொத்த விலை விற்பனை மூலம் இந்தியாவில் இருக்கும் பெரிய கடைகள் முதல் சிறு கடைகள் வரையில் தனது பொருட்களை விற்பனை செய்வதற்காக மெட்ரோ ஏஜி நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
4,060 கோடி ரூபாய் டீல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஜெர்மன் நாட்டின் மொத்த விலை விற்பனை நிறுவனமான மெட்ரோ ஏஜி கேஷ் அண்ட் கேரி-யின் இந்திய வர்த்தகத்தை மொத்தமாக 4,060 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற உள்ளது. மெட்ரோ-வின் வர்த்தகத்தைக் கைப்பற்ற பெரும் போட்டி இருந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இப்போட்டியில் வென்றுள்ளது.
மெட்ரோ AG
இந்தியாவில் மெட்ரோ நிறுவனத்தின் கடைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக மாடல் மிகவும் முக்கியமானது. ஜெர்மன் நாட்டின் கேஷ் அண்ட் கேரி வர்த்தக நிறுவனமான மெட்ரோ AG இந்தியாவில் அதிகப்படியான தள்ளுபடி விலையில் ஹோல்சேல் வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
31 கடைகள்
இந்தியாவில் 2003ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் மெட்ரோ AG நிறுவனம் நாடு முழுவதிலும் 31 கடைகளையும், சுமார் 5000 நேரடி ஊழியர்களை வைத்துள்ளது. குறிப்பாகப் பெரு நகரங்களில் இருக்கும் சிறு கடைகளுக்கு அதிகப்படியான தள்ளுபடி அளித்து முக்கிய வாடிக்கையாளராகக் கொண்டு உள்ளது.
இந்திய சந்தை
இந்திய ரீடைல் துறையில் டாடா முதல் ரிலையன்ஸ் வரையில், ஸ்விக்கி, டன்சோ, Blinkit போன்ற புதிய இண்டர்நெட் நிறுவனங்கள் வந்துள்ளதால் போட்டி அதிகரித்துள்ள காரணத்திற்காகவும் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்ய முடியாத நிலையில், இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது மெட்ரோ ஏஜி நிறுவனம்.
போட்டி
மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை வாங்க அமேசான், தாய்லாந்து நாட்டின் Charoen Pokphand (CP) Group, ரிலையன்ஸ் ரீடைஸ், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (Dmart), டாடா குரூப், லூலூ குரூப் ஆகியவையும் சமாரா கேப்பிடல் போன்ற முதலீட்டு நிறுவனங்களும் இந்நிறுவனத்தை வாங்குவதற்காக ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications