இப்படி ஒரு சோதனையான காலத்திலும் சாதனை படைத்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
தான் எப்போது, எந்த தொழிலை தேர்தெடுத்தாலும், அதில் மற்றவர்களை ஒரங்கட்டி, தான் எப்போதும் கொடிகட்டி பறப்பது தான் முகேஷ் அம்பானியின் சாதனை.
இந்த வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது எப்போதும் மக்களுக்கு அபார பிரியம் உண்டு.
சந்தை மூலதனம்
இந்த காரணத்தினால் தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் டாப்பில் உள்ளது. குறிப்பாக 2019ல் மட்டும் 2.49 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் சாதனை
ஒரு வருடத்தில் ஒரு நிறுவனம் இப்படி அதிக அளவிலான சந்தை மதிப்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்றதொரு சந்தை மூலதனத்தினை கடைசியாக 2017ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2.3 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இடத்தில் டாடா
இதே டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1 டிரில்லியன் ரூபாயாகும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த இரண்டு காலாண்டர் வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 4 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தினை சேர்த்துள்ளது.
கார்ப்பரேட் வரி ஊக்குவிப்பு
இந்திய நிறுவனங்கள் வரி குறைப்பை அரசாங்கம் அறிவித்ததையடுத்து, உணர்வு பூர்வமாக இது பங்கு சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க உதவியது. ஏனெனில் உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை குறைத்துள்ள நிலையில், இது நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கும், மேலும் நிறுவனங்களில் முதலீடுகளை ஈர்க்க இது வழி வகுக்கும். குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் மூலதனத்தை அதிகரிக்க இது வெகுவாக உதவியது.
மொத்த சந்தை மூலதனம்
இந்த நிலையில் சந்தைகளில் முதலீடு அதிகரித்துள்ளது ரிலையன்ஸ். 2019ம் ஆண்டில் சந்தையில் இந்திய பங்குகள் 12 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தினை அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக கடந்த 2018ல் இந்தியாவின் மொத்த சந்தை மூலதனம் 6.28 டிரில்லியன் ரூபாய் குறைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications